அரசியலுக்குண்டான தகுதி எனக்கில்லை! - கமல்

அரசியல் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
பொதுவாக எந்த ஒரு தொழிலில் ஈடுபடுவதாக இருந்தாலும் அதற்கு தனித் தகுதியும் திறமையும் வேண்டும். அரசியலுக்கும் அப்படி ஒரு தகுதி தேவைப்படுகிறது. எனக்கு அந்தத் தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதேபோல அரசியல் குறித்த எனது பார்வைகளைக் கூட எந்த ஒரு பொது மேடைகளிலும் வைத்து நான் பகிரந்து கொண்டதில்லை.
எனக்குள்ள ஒரே தகுதி, ஆண்டுக்கு ஒருமுறையோ, சில முறைகளோ ஆள்காட்டி விரலில் மை வைத்துக் கொண்டு, அதை வெளியில் காட்டிக் கொள்வதுதான். அதுவே பெரிய விஷயம், என்கிறார் கமல்ஹாசன்.
இப்போது உன்னைப் போல் ஒருவன் படத்தில் பிஸியாக இருக்கும் கமல், விரைவில் முழுக்க முழுக்க இந்தியில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications