நயன்தாராவுக்காக சிபாரிசு செய்யவில்லை! - பிரபுதேவா

இதுவரை கிசுகிசுவாக மட்டுமே இருந்த தங்கள் காதலை, ஒன்றாக வெளியில் சுற்றுவது மற்றும் பேட்டிகள் மூலம் நயன்தாராவும் பிரபுதேவாவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரவுரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அதற்கு இருதரப்பிலும் சம்மதம் தரப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நயந்தாராவை இந்திப் பட உலகில் அறிமுகம் செய்து வைக்க பிரபு தேவா முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரபு தேவாவிடம் கேட்ட போது அவர் கூறியிருப்பதாவது:
இந்தியில் நான் இயக்கிய படம் ஹிட்டானதால் மீண்டும் அங்கு இன்னொரு படம் எடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கான கதை வேண்டுமல்லவா... அது மட்டுமல்ல சல்மான்கான் ஒன்றும் சும்மா இல்லை. இப்போது மூன்று படங்களில் பரபரப்பாக உள்ளார். எனவே நான் அடுத்த இந்திப்படம் செய்ய கொஞ்ச நாளாகும்.
இந்தியில் நயன்தாராவுக்காக நான் சிபாரிசு செய்வதாக செய்திகள் வந்துள்ளன. அதில் உண்மை இல்லை. ஜெயம் ரவியை வைத்து இயக்கப்போகும் படத்துக்கான கதை விவாதம் நடந்து வருகிறது. இன்னும் கதாநாயகி யாரென்பது முடிவாகவில்லை, என்றார் பிரபுதேவா.


Click it and Unblock the Notifications











