உடற் பயிற்சியாளருடன் காதல்? லட்சுமிராய் மறுப்பு!

Lakshmi Rai
தனது உடற் பயிற்சியாளர் பிரசாத் என்பவரை காதலிக்கிறார் என வந்துள்ள செய்தியை மறுக்கிறார் லட்சுமி ராய்.

லட்சுமி ராய்க்கும் அவரது உடற்பயிற்சியாளர் பிரசாத்துக்கும் காதல் என்றும், இருவரும் வெளியூரில் ஒரே ஹோட்டலில் தங்குவதாகவும், பக்கத்து அறையையே அவருக்கு ஒதுக்கித் தரவேண்டும் என்று லட்சுமி ராய் கேட்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்து லட்சுமிராயிடம் பேசினோம். நமது செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:

டோணியுடன் காதல், ஆர்யாவுடன் தனிக் குடித்தனம், புதுமுக நடிகர் ஒருவருடன் காதல்... இப்படியெல்லாம் செய்தி வெளிவந்தபோதெல்லாம் நான் அதிர்ச்சி அடையவில்லை. ஏனென்றால், இந்த செய்திகள் எந்த அளவும் அவர்களின் இயல்பான வாழ்க்கையை பாதிக்கப் போவதில்லை என்று எனக்குத் தெரியும்.

ஆனால் இவர் எனது உடற்பயிற்சி நிபுணர். எனக்கு உடற் பயிற்சி சொல்லித் தருபவர்.

ஒரு மேக்கப் மேனோ, டச்சப் பாயோ, ஹேர் டிரஸ்ஸரோ எப்படி என்னுடன் பண்புரிகிறார்களோ.. அப்படித்தான் பிரசாத்தும்.

பாவம், சமீபத்தில்தான் பெண் பார்த்து அவருக்கு நிச்சயதார்த்தம் செய்யும் அளவுக்கு வந்திருக்கிறது.
இந்தச் செய்தி அவரது குடும்பத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கும் என்பதுதான் உண்மை.

கிசுகிசுக்களை ஒருபோதும் நான் சட்டை செய்ததில்லை. அதை எழுதியவர்களிடம் கூட நான் அன்பாகத்தான் பழகி வந்தி்ருக்கிறேன். காரணம் அது எனது வாழ்க்கையின் ஒரு பகுதி... வரத்தான் செய்யும்.

ஆனால் இப்போது வெளியாகியுள்ள செய்தி என்னை பாதிக்காவிட்டாலும், ஒரு சாதாரண நபரான பிரசாத்தின் திருமண, குடும்ப வாழ்க்கையையே பாதிக்குமே என்பது தான் வருத்தம்.

அடுத்து ஒரு இந்திப் படத்தல் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். அதற்காக ஒன்பது கிலோ எடையை நான் குறைத்தாக வேண்டும். தமிழில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், நான் அவனில்லை பாகம் 2, மலையாளத்தில் மம்முட்டியுடன் 2 படங்கள், மோகன்லாலுடன் 1 படம் ஒப்பந்தமாகி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

அதனால், உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று பயிற்சி செய்யும் அளவு நேரமில்லாமல் பறந்து கொண்டிருக்கிறேன். இதற்காகத்தான் எனது உடற்பயிற்சி நிபுணரை கூடவே அழைத்துச் சென்றேன் என்பது மட்டுமே உண்மை.

பயிற்சியாளர் பக்கத்து அறையில் இருந்தால், அதிகாலை 5 மணியிலிருந்து 7 மணி வரை தொடர்ந்து உடற் பயிற்சியில் ஈடுபட முடியும். இந்த இரண்டு மணி நேரம் கட்டாயம் நான் உடற் பயிற்சி செய்தாக வேண்டும். அப்போதுதான், அடுத்த சில நிமிடங்களில் நான் மேக்கப் போட்டு ஷூட்டிங்குக்கு தயாராக முடியும்.

வேறொரு ஹோட்டலில் இந்த பயிற்சியாளர் தங்கியிருந்தால் அவர் வந்து சேர அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ ஆகும். அந்த கால விரயத்தைத் தவிர்க்கவே நான் தங்கியிருந்த ஹோட்டலில் தங்க வைத்தேன். மற்றபடி பக்கத்து அறையிலேயே ரூம் போட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. எனது மேக்கப் மேன், ஹேர் டிரஸ்ஸர் போன்றோரும் கூட அந்த ஹோட்டலில்தான் தங்கியிருந்தனர்.

உடன் பணியாற்றுபவர்களுடன் காதல் என்று எழுத ஆரம்பித்தால் இனி உதவியாளர்கள் என்று யாரையுமே வைத்துக் கொள்ள முடியாத நிலைதான் ஏற்படும்.

மற்றவர்களுடைய வாழ்க்கையை கருத்தில் கொண்டு செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X