அசினை விட நயன்தாரா பெட்டர்! - கரீனா 'சர்டிபிகேட்'
காவலன் படத்தில் நடித்த அசினை விட, அதன் மலையாள ஒரிஜினல் பாடிகார்டில் நடித்த நயன்தாராதான் சிறப்பாக நடித்துள்ளார் என சர்டிபிகேட் தந்துள்ளார் இந்தி நடிகை கரீனா கபூர்.
மலையாள பாடிகார்ட் படம் தமிழில் காவலன் என்ற பெயரி்ல் வெளியானது. இப்போது அந்தப் படம் பாடிகார்ட் எனும் பெயரிலேயே இந்தியில் ரீமேக் ஆகிறது. மலையாளம், தமிழில் இந்தப் படத்தை இயக்கிய சித்திக்தான் இந்தியிலும் இயக்குகிறார். நாயகியாக நடிப்பவர் கரீனா கபூர். சல்மான்கான் ஹீரோவாக நடிக்கிறார்.
படப்பிடிப்பு துவங்கும் முன், கரீனா கபூருக்கு காவலன், பாடிகார்ட் ஆகிய படங்களின் டிவிடிக்களைக் கொடுத்து பார்க்கச் சொல்லியிருக்கிறார் சித்திக். இரண்டு படங்களையும் பார்த்த பிறகு, நயன்தாராவின் நடிப்புதான் எளிமையாகவும் இயல்பாகவும் இருந்ததாகவும், அசின் அந்த அளவுக்கு தன்னைக் கவரவில்லை என்றும் கரீனா கூறிவிட்டாராம்!
இதற்கிடையே, இந்தப் படம் தெலுங்கிலும் பாடிகார்ட் என்ற பெயரிலேயே தயாராகிறது. நாயகனாக நடிப்பவர் வெங்கடேஷ். ஹீரோயினாக நடிக்க மீண்டும் நயன்தாராவிடம் கேட்டுள்ளார்களாம்!


Click it and Unblock the Notifications











