காஞ்சீவரத்தை ரீமேக் செய்ய முடியாது- பிரியதர்ஷன்

காஞ்சீபுரம் பட்டு நெசவாளர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும், 'காஞ்சீவரம்' தேசிய விருதை பெற்றது. பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடித்திருந்த திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இப்படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என இந்தி தயாரிப்பாளர்கள் பலர் பிரியதர்ஷனிடம் கேட்டபோது, அவர் அதற்கு மறுத்துவிட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், 'காஞ்சீவரம் மாதிரியான படங்களை ஒரே ஒருமுறை தான் உருவாக்க முடியும். இன்னொன்று அது குறிப்பிட்ட பின்னணியில் எடுக்கப்பட்ட கிளாஸிக் படம்.
நான் பல மலையாள படங்களை இந்தியில் ரீமேக் செய்துள்ளேன். ஆனால் காஞ்சீவரத்தை ரீமேக் செய்யமுடியாது. இதுமாதிரி படங்களை எல்லாம் தொடாமல் அப்படியே விட்டுவிடவேண்டும்' என்றார்.
Comments


Click it and Unblock the Notifications