அக்கான்னு கூப்பிட்டு...!-நயன்தாரா பற்றி ரம்லத்

By Chakra

Ramlath and Nayanthara
அக்கா அக்கா என்று என்னிடம் பாசமாகப் பழகுவது போல நடித்த நயன்தாரா, ஒரு கட்டத்தில் என் கணவரையே தனக்கு மாப்பிள்ளையாகக் கேட்டுவிட்டார். எந்தப் பெண்ணும் கேட்காததைக் கேட்டார் நயன்தாரா, என்று குமுறியுள்ளார் ரம்லத்.

வில்லு படத்தில் நடிக்கும்போதுதான் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் வீடு வரை வந்து ரம்லத்திடம் சொந்த தங்கையைப் போல பழகினாராம் நயன்.

பின்னர் ஒரு நாள் திடீரென்று பிரபுதேவாவை நானும் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஒரே வீட்டில் இருக்கலாம்னாலும் ஆட்சேபணை இல்லை என்றாராம் நயன்தாரா.

இதுகுறித்து இப்படிக் கூறுகிறார் ரம்லத்:

சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க. அவங்களை பாசத்தோடதான் உபசரிப்பேன். எங்களுக்கு சோறு போடுற தொழிலாச்சே. அந்த மாதிரிதான் அந்த பெண்ணையும் ஆரம்பத்துல பார்த்தேன். வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவரை சார்னும் என்னை அக்கான்னும் கூப்பிடும்.

ஆனா அது மனசுல இந்த மாதிரி அநியாயமான ஒரு ஆசை இருக்குதுங்குறது எனக்கு தெரியாம போச்சு. இல்லாட்டி என் வீட்டுக்கே வந்து என் புருஷனை விட்டு தரச்சொல்லி கேக்குற வரைக்கும் அதை நம்பியிருப்பேனா? உலகத்துல ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணுகிட்ட கேட்க கூடாததை எங்கிட்ட கேட்டுச்சு. அன்னைக்குதான் வாழ்க்கையிலேயே நான் தூங்காத முழு ராத்திரி.

மூத்த பையன் விஷால் கேன்சர்ல இறந்த துக்கத்துல இருந்து முழுசா மீண்டு வராத நிலையில எங்கிட்ட வந்து இப்படி கேட்டாங்க.

விஷால் விஷயத்துல கூட பிரபுதேவா அக்கறையே காட்டல. உடலை அடக்கம் பண்ணிட்டு வந்ததோட சரி. மறுநாள் அந்த பொண்ணோட கிளம்பிட்டார்.

பையன் போயிட்டானே என்ற கவலையெல்லாம் நயன்தாரா வந்ததும் ரெண்டாந்தரமா போச்சு. மொத்தத்துல அக்கான்னு சொல்லி வீட்டுக்குள்ளே வந்தவங்களை நம்புனதாலதான் இப்ப சக்களத்தி சண்டை போட வேண்டியிருக்கு.

வர்றபோதெல்லாம் சாக்லெட், டிரஸ்னு வாங்கிட்டு வந்ததால பசங்களும் ஆன்ட்டின்னு பிரியா பழகுனாங்க. எல்லாம் வேற நோக்கம்னு அந்த பிஞ்சுகளுக்கே இன்னிக்கு தெரிஞ்சுருச்சு. அந்த பொண்ணு போட்டோவை பார்த்தா கிழிச்சு போடுறாங்க. டிவியில அவங்க நடிக்கிற படம் வந்தா ஆஃப் பண்ணிடுறாங்க. ராத்திரி து£க்கத்துல பாதியில எழுந்து அப்பா எங்கம்மான்னு கேக்குறான் கடைசி பையன் ஆதித். மன ரீதியா அவங்க பாதிக்கப்பட்டிருக்காங்க...", என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X