வடிவேலுவுக்கு சிங்கமுத்து துரோகம் செய்தார்!-நடிகர் ஜெயமணி

சாது படத்தில் காமெடியனாக அறிமுகமானார் ஜெயமணி. அதன் பிறகு 70 படங்களில் நடித்துவிட்டார். வடிவேலுவும் ஜெயமணியும் ஆரம்பத்தில் நெருக்கமாக இருந்தனர். திடீரென்று ஒருநாள் இருவருக்கும் கடுமையான மோதல் ஏற்பட, பிரிந்துவிட்டனர். நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது மீண்டும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்துள்ளனர்.
வடிவேலு- சிங்கமுத்து மோதல் குறித்து ஜெயமணி கூறியதாவது:
தலைசிறந்த காமெடி நடிகர் வடிவேலு, அவர் மலை. பிற காமெடியர்கள் மடு. ஆரம்ப காலத்தில் எனக்கும் வடிவேலுவுக்கும் நல்ல நட்பு இருந்தது. ஆனால், எங்களை சதி செய்து பிரித்து விட்டார் சிங்கமுத்து. என்னைப் பற்றி அவரிடமும் அவரைப்பற்றி என்னிடமும் தப்பு தப்பாக பேசி விரிசல் ஏற்படுத்தினார்.இப்போது அவரின் உண்மையான முகத்தை இருவரும் புரிந்து கொண்டுவிட்டோம்.
சிங்கமுத்துக்கு வடிவேலு எவ்வளவோ உதவிகள் செய்துள்ளார். அவருக்கு துரோகம் செய்து விட்டார். நல்ல மனிதரான வடிவேலுவை சிங்கமுத்து ஏமாற்றியது உண்மை.
நான் அரசு வேலையை உதறி விட்டு சினிமாவுக்கு வந்தேன். வளைந்து நெளிந்து போகத் தெரியாததால் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இப்போது சினிமா உலகின் நெளிவு சுழிவுகளைப் புரிந்து கொண்டேன். வடிவேலுவும் அவரது படங்களில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார் என்றார்.


Click it and Unblock the Notifications











