அசின் ஒரு குழந்தை-அனுஷ்கா சர்மா

எடுத்த எடுப்பிலேயே ஷாருக் கானுடன் இணைந்து நடித்து புகழ் ஏணியில் ஏறியவர் அனுஷ்கா சர்மா. ஷாருக்குடன் அவர் நடித்த ரப் நே பனா தி ஜோடி படம் அவருக்கு பாலிவுட்டில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.
இந்த நிலையில் ஆசின் மீது தற்போது பாய்ந்துள்ளார் அனுஷ்கா. உங்களுக்கு ஆசின் போட்டியா என்று கேட்டால் படாரென வெடிக்கிறார் அனுஷ்கா.
ஆசின் ஒரு பச்சைக் குழந்தை. கஜினி படத்திற்கு முன்பாகவே நான் நடித்த ரப் நே.. வெளியாகி விட்டது. ஆசின் தென்னிந்தியாவில் நிறையப் படங்களில் நடித்தவராக இருக்கலாம். ஆனால் பாலிவுட்டில் அவர் ஒரு புதுமுகம்தான்.
எனக்குப் பிறகு வந்தவர்தான் அவர். என்னைப் பொறுத்தவரை அவர் பாலிவுட்டில் ஒரு குழந்தைதான் என்கிறார் கடுகடுவென.
சபாஷ், நல்ல போட்டி..


Click it and Unblock the Notifications











