கல்யாணம் செய்யவெல்லாம் இப்போ எனக்கு நேரமில்லை-வித்யா பாலன்

By Sudha

Vidya Balan
எனக்குக் கல்யாணம் நடைபெறவில்லை. அதற்கெல்லாம் இப்போது எனக்கு நேரமும் இல்லை. நான் அவ்வளவு பிசியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் வித்யா பாலன்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து வருகிறார் வித்யா பாலன். சில்க்கின் பிறந்த நாளான டிசம்பர் 2ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் வித்யா பாலனுக்கும், சித்தார்த் ராய் கபூருக்கும் ரகசிய கல்யாணம் நடந்து விட்டதாக செய்திகள் பரவின. ஹனிமூனுக்கு இருவரும் போகப் போவதாகவும் தகவல்கள் கூறின.

ஆனால் இதை வித்யா பாலன் மறுத்தார். தற்போது தான் மும்பை அருகே டர்ட்டி பிக்சர்ஸ் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எனக்கு கல்யாணம் ஆகவில்லை. அதற்கான நேரமும் எனக்கு வரவில்லை. எனக்கு இப்போது நிறைய வேலைகள் உள்ளன. எனவே கல்யாணத்திற்கு எனக்கு நேரமில்லை என்பதே உண்மை. இப்போது டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பில் நான் பிசியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் வித்யா பாலன்.

வித்யா பாலன் திருமணச் செய்தி குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர் மும்பைக்கு அருகே படப்பிடிப்புக்காக முகாமிட்டுள்ள அவரை நேரில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X