எனக்கெதிராக சதி! நயன்

சமீபத்தில் புதிய நடிகை சனா கான் (சிம்புவின் புதிய ஜோடி) நயனதாராவைப் பற்றி பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.
நயனதாரா ஒரே மாதிரி எல்லா படத்திலும் நடிப்பதாகவும் அவரிடம் என்ன இருக்கிறதென்று எல்லாரும் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து நயனதாராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில்:
என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். அதைப் பற்றி எனக்கு அக்கறையில்ல... பதிலுக்கு நானும் அப்படியெல்லாம் பேச முடியும். இந்த பேச்சுக்கு நிஜமான பின்னணி என்ன... யார் தூண்டிவிட்டுப் பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியும். இந்த சதி வேலை என்னை ஒன்றும் செய்துவிடாது..., என்றார் நயனதாரா.
நயனதாரா பற்றி மோசமாக கருத்து சொன்னதற்கு முந்தின இரவுதான் த்ரிஷா அளித்த விருந்தில் சனாகான் கலந்து கொண்டதாகவும், இருவரும் மிக நெருங்கிப் பழகுவதாகவும், ஏற்கெனவே நயனதாரா மீது கடுப்பில் இருக்கும் த்ரிஷாவின் தூண்டுதலாலேயே சனா இப்படி பேசியதாகவும் கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் விஷாலுடன் நயனதாரா விருந்துக்குச் சென்றிருந்தபோது, அங்கே சிம்புவை வரவழைத்து நயனுக்கு சங்கடத்தை உண்டு பண்ணியது த்ரிஷாதான் என்று கிசுகிசுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
கில்லி நாயகி வி்ல்லி ஆனது எப்போது?


Click it and Unblock the Notifications











