'இதுதான் தமிழனின் சரித்திரம்' - சாமி

'இது வழக்கமான படம் இல்லை' என்ற வழக்கமான அறிமுகத்தோடு ஆரம்பித்த சாமி, இப்படிக் கூறுகிறார்:
அழிந்து வரும் தமிழனின் தற்காப்புக் கலையான சிலம்பம் விளையாட்டின் சரித்திரத்தைப் பற்றிய கதைதான் இந்த படம். வரும் தலைமுறையினருக்கு சிலம்பம் பற்றி சிறு குறிப்பு தேவைப்பட்டாலும் இந்தப் படம் சிறந்த ஆவணமாய் இருக்கும்.
சிலம்ப வீரர்களின் காதலும், வீரமும் செறிந்த வாழ்க்கையைச் சொல்லும் நல்ல பொழுதுபோக்கு படமாக 'சரித்திரம்' இருக்கும். ஒருவிதத்தில் தமிழ்நாட்டின் சரித்திரமே இந்த சிலம்பத்தி்ல் அடங்கியிருக்கிறது. சிலம்பத்தை அறிந்தவன் தமிழன் சரித்திரத்தை அறிந்தவனாகிறான்.
தற்போது பொள்ளாச்சியில் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றார் சாமி.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், கலாபவன் மணி, 'மிருகம்' ஆதி ஆகியோர் நடிக்கிறார்கள். கேரள நடிகை ஸ்ரீதேவிகா கதாநாயகியாக நடிக்கிறார்.
இசை -சபேஷ்முரளி, பாடல்கள் -நா.முத்துக்குமார், நடனம் -தினேஷ், தயாரிப்பு -எஸ்.என்.ராஜா.
ஏப்ரலில் படத்தை எதிர்பார்க்கலாம், சரித்திரத்தை.


Click it and Unblock the Notifications











