மகள் இலக்கியாவுக்கு ரகசிய திருமணமா?-டி.ஆர் மறுப்பு

By Chakra

T Rajendar and Simbu
என் மகளுக்கு ரகசியமாகத் திருமணம் நடந்துவிட்டதாக வரும் செய்திகள் பொய்யானவை. அவளுக்கு இப்போதுதான் மாப்பிள்ளையே பார்க்க ஆரம்பித்துள்ளோம் என்றார் இயக்குனர் விஜய டி ராஜேந்தர்.

திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுக தலைவருமான விஜய டி.ராஜேந்தர் மகள் தமிழ்இலக்கியா. குழந்தை நட்சத்திரமாக அவரது படங்களில் நடித்துள்ளார். இப்போது அவர் எம்பிஏ படிக்கிறார். அவருக்கு ரகசியமாக காதல் திருமணம் நடந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து டி.ராஜேந்தர் கூறுகையில், என் மகள் இலக்கியாவுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறோம். படித்த மாப்பிள்ளையாக-பண்புள்ள மாப்பிள்ளையாக தேடி வருகிறோம்.

தங்கையின் திருமணம் முடிந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று என் மகன் சிலம்பரசன் உறுதியாக இருக்கிறான். அவனுக்கும் நிறைய பெரிய இடத்து சம்பந்தங்கள் வந்தவண்ணம் உள்ளன. நான், ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவன். அவனுக்கு பொருத்தமான ஜாதகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இந் நிலையில், தமிழ் இலக்கியாவுக்கு சென்னையில் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது, தவறான தகவல்.

சமீபத்தில் என் மனைவி உஷாவின் தங்கை வசந்தி விஸ்வநாதனின் மகன் சூரஜுக்கு, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது. அதில் நான் குடும்பத்துடன் கலந்து கொண்டேன். அதைப் பார்த்தவர்கள் என் மகளுக்கு நடந்த திருமணமாக கருதி, தவறான தகவலை பரப்பி விட்டார்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X