எக்கச்சக்க சம்பளம் கேட்கும் ஸ்ரேயா!

ஸ்ரேயா நடித்த முதல் இந்திப் படம் ஆவாரபன் அவருக்கு நல்ல பெயரைத் தந்தது. அதேபோல அவர் நடித்த முதல் ஆங்கிலப் படம் தி அதர் எண்ட் ஆப் லைன் சமீபத்தில் ரிலீசாகியுள்ளது.
ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும் நடித்துவிட்டதால் ஸ்ரேயா இப்போது தமிழில் அதிக சம்பளம் கேட்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது:
இது முழுக்க முழுக்க வதந்தி. என்னைப் பற்றி ஏதாவது வதந்தி வந்துகொண்டே இருக்கிறது. இது தேவையற்றது, வேண்டுமென்றே சிலர் செய்வது.
சமீபத்தில் நான் ஒப்பந்தமான தீபா மேத்தாவின் வாட்ஸ் குக்கிங் ஸ்டெல்லா படத்தில் என் சம்பளம் என்னவென்று கேட்டுப் பாருங்கள். அதன்பிறகு இப்படியெல்லாம் பேச மாட்டீர்கள்.
தி அதர் எண்ட் ஆஃப் லைன் ஹாலிவுட் படத்துக்கு நான் கேட்காமலே பெரிய சம்பளம் கொடுத்தார்கள். பல படங்களுக்கு அட்வான்ஸ் கூட நான் வாங்குவதில்லை.
எனக்கு கதைதான் முக்கியம். எந்த மொழியில் நடித்தாலும் அதில் 100 சதவீதம் உழைப்பேன்.
தமிழில் ஜக்குபாய், கமல் படங்களுக்குப் பிறகு ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறேன். விஷால் ஜோடியாக தோரணையில் நடிக்கிறேன். தீபா மேத்தாவின் கோமகதா மாரு படத்திலும் நான்தான் ஜோடி. எல்லாமே முக்கியமான வாய்ப்புகள் என்றார்.


Click it and Unblock the Notifications











