'சுனேனா'.. வற்புறுத்துகிறேனா?-நகுலன்

பாய்ஸில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகி, சன் பிக்சர்ஸின் காதலில் விழுந்தேன் மற்றம் மாசிலாமணி மூலம் மூன்னணி இளம் நாயகர்களில் ஒருவராக மாறியிருப்பவர் நகுலன். தேவயானியின் தம்பி இவர்.
சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
பாய்ஸுக்குப் பிறகு நான் நடித்த இரு படங்களையும் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்த வெற்றிக்கு காரணம் எங்களது டீம் ஒர்க்தான். சன் டிவியின் விளம்பரங்களும் இந்த வெற்றிக்கு உதவின. ஆனாலும் இது கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.
எனது படங்களின் நாயகியை நான் தீர்மானிப்பதில்லை. இயக்குநர் - தயாரிப்பாளரே முடிவு செய்கின்றனர். சுனேனாதான் ஜோடியாக வேண்டும் என்று நான் வற்புறுத்துவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. நிஜ வாழ்க்கையி்ல் என்னுடைய ஜோடி யார் என்பதை என் அம்மாதான் முடிவு செய்வார்.
எனக்கான கதைகளை நான்தான் கேட்டு முடிவு செய்கிறேன். என் அக்கா, அத்தான் அல்லது அம்மா யாரும் இதில் தலையிடுவதில்லை. காரணம் தொழில் வேறு, தனிப்பட்ட உறவுகள் வேறு.
என் அக்கா தேவயானியுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு தயக்கமில்லை. வாய்ப்பு வந்தால் சந்தோஷமாக நடிப்பேன்.
அடுத்து நான் கந்தகோட்டை படத்தில் நடிக்கிறேன். அதற்கடுத்து சன் பிக்சர்ஸ் படத்தில் நடிக்கிறேன். ஒரு நேரத்தில் ஒரு படம்தான் என்பதில் தெளிவாக இருக்கிறேன். சூர்யா, விக்ரம் மாதிரி வித்தியாசமாக கெட்டப் மார்றி நடிக்கவும் ஆசைதான். அதற்கேற்ப கதை அமைந்தால் ஒப்புக் கொள்வேன், என்றார் நகுலன்.
தனது மேனேஜராக மூர்த்தி, பிஆர்ஓவாக விகே சுந்தரை நியமித்திருப்பதாகவும் இன்று அறிவித்தார்.


Click it and Unblock the Notifications











