சுதீப் எனது நண்பர், சொல்கிறார் சோனியா அகர்வால்!

இயக்குநர் செல்வராகவனின் முன்னாள் மனைவி சோனியா அகர்வால். செல்வராகவன் இப்போது 2வது திருமணம் செய்து கொண்டு விட்டார். இந்த நிலையில் சோனியா அகர்வாலுக்கும், கன்னடத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர்-நடிகர் சுதீப்புக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுதீப்பும் விவாகரத்து செய்தவர்தான். மனைவி பிரியாவை விவாகரத்து செய்து விட்டு வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் சோனியாவும், சுதீப்பும் இணைந்து பழகி வருவதாக வெளியாகியுள்ளன செய்திகள்.
இதுகுறித்து சோனியா அகர்வால் கூறுகையில், எனக்கும், சுதீப்புக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை, வெறும் நட்புதான் இது என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே நடிகை மீனாவையும், சுதீப்பையும் இணைத்து முன்பு செய்திகள் வந்தன. ஆனால் வந்த வேகத்தில் மீனா பெங்களூர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications