ஒரு 'மைனா'வின் மெளனக் காதல்!

By Sudha

மைனா நாயகி அமலா பாலுக்குள் ஒரு காதல் இருந்திருக்கிறது. அந்தக் காதலை இதுவரை சொல்லாமல் தனக்குள்ளேயே போட்டு மூடி வைத்திருக்கிறார். இப்போதும் கூட அந்த மெளனக் காதல் மெல்லிய சங்கீதமாக அவருக்குள்ளேயே இருக்கிறதாம்.

கேரளத்திலிருந்து வந்த நாயகிகளில் ஒருவர்தான் அமலா பால். ஆரம்பத்தில் அவருக்கு சிந்து சமவெளிதான் அடையாளம் கொடுத்தது. ஆனாலும் அவரை தூக்கி நிறுத்தி உச்சாணியில் பறக்க விட்டது மைனா.

விக்ரமுடன் நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிற அமலா பால் வெளிப்படையாக பேசி, பரவாயில்லையே என்று அத்தனை பேரிடமும் பேஷ் பேஷ் வாங்க ஆரம்பித்திருக்கிறார்.

நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்று யாராவது கேட்டால் கூட வெளிப்படையாக தனது மனதில் உள்ளதைப் பேசுகிறார் அமலா.

எனக்குள் காதல் வந்ததில்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன். எனக்கும் காதல் வந்தது. ஆனால் இப்போதல்ல பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது.

அப்போது என்னுடன் படித்த ஒருவன் மிக அழகாக இருப்பான். அவன் மீது எனக்கு காதல் மலர்ந்தது. ஆனால் அதை நான் அவனிடமும் சொன்னதில்லை. யாரிடமும் சொன்னதில்லை. எனக்குள்ளேயே வைத்துக் கொண்டேன்.

அதேபோல என்னுடைய அழகைப் பார்த்து பலரும் எனக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் நான்தான் எதையும் ஏற்கவில்லை. எனக்குத்தான் காதல் வந்ததே தவிர மற்றவர்களிடமிருந்து வந்த காதலை ஏற்கும் மனம் அப்போது எனக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார் மெல்லிய புன்னகையுடன் அமலா.

அமலா இப்போது தமிழில் உச்சத்தை அடையும் லட்சியத்துடன் நடித்து வருகிறாராம். விக்ரமுடன் நடித்தபோது தொழில் பக்தி தெரிந்து கொண்டதாக கூறும் அமலா, ஆர்யாவுடன் வேட்டை படத்திலும், அதர்வாவுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சந்தோஷம் அமலா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X