பொய் சொல்லி அரசிடம் ரூ 25 லட்சம் பெற்ற திரைப்பட விழா அமைப்பு - அமீர் கண்டனம்

மேலும் இந்த சர்வதேச திரைப்பட விழாவையே புறக்கணிப்பதாகவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் செயலர் இயக்குநர் அமீர் வெளியிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு மூன்று தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி இயக்கிய 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படமும், இந்திய பனோராமாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட லீனா மணிமேகலை இயக்கிய 'செங்கடல்' திரைப்படமும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த திரைப்படக்குழுவில் எங்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா மற்றும் செயலாளர் அமீர் ஆகியோரும் இடம் பெற்றிருப்பதாக தவறான தகவல்களை அளித்து, தமிழக அரசிடமிருந்து மேற்கண்ட திரைவிழாவிற்கு 25 லட்சம் பெறப்பட்டிருக்கிறது.
எங்கள் சங்கத்தின் சார்பில் இந்த திரைப்பட விழாக் குழுவின் இத்தகைய செயலை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த திரைப்பட விழாவை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் புறக்கணிக்கிறது. மேலும் இதுபோல தவறுகள் நடக்காமல் இருக்க தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம்தான் தமிழக அரசு இந்த அமைப்புக்கு ரூ 25 லட்சம் நிதி வழங்கியது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், திரைப்பட விழா நடத்தும் அமைப்பின் தலைவர் தங்கராஜ், நடிகை சுகாசினி ஆகியோர் இந்த நிதியை முதல்வர் ஜெயலலிதாவிடம் பெற்றனர்.


Click it and Unblock the Notifications