எந்திரனில் ரஜினி நடிப்பு-வாயடைத்துப் போன தனுஷ்

By Sudha

Danush
எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பு என்னை வாயடைக்க வைத்துவிட்டது, என்றார் தனுஷ்.

எந்திரன் படத்தை மீண்டும் பார்த்த தனுஷ், அந்த அனுபவம் குறித்து கூறுகையில், "ஒரு வாரம் கழித்து மீண்டும் எந்திரன் பார்த்தேன். படத்தை ரசிகர்கள் ரசிக்கும் விதம், ரசிகரல்லாதவர்களும் தரும் வரவேற்பு என்னை அதிசயிக்க வைத்தது.

படத்தில் ரஜினியின் நடிப்பு ஒவ்வொரு ப்ரேமிலும் பிரமிக்க வைத்துவிட்டது. இளைஞர்களுக்கு அவரது உழைப்பு ஒரு பாடம். அவரது நிலையில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்த அளவு இறங்கிவந்து இயல்பாக நடித்திருப்பார்களா என்பது சந்தேகமே. நடிப்பில் அவருக்கு இணை அவர்தான்.

என் மாமனார் அவர் என்பதால் நான் இப்படிச் சொல்லவில்லை. நான் என்ன சொன்னாலும் அவர் விஷயத்தில் அது கொஞ்சம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கும் அவர் இந்த அளவு உழைக்கக் காரணம், சினிமா மீதுள்ள அவரது காதல்தான்.

எந்திரனை பார்த்து முடித்தபிறகு என் மனதில் தோன்றியது இதுதான்... சூப்பர் ஸ்டார், கடின உழைப்பு, தொழில் மீதான பக்தி... இவற்றுக்கெல்லாம் ஒரேயொரு உதாரணம்தான்... அவர் ரஜினிகாந்த்", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X