twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தம் அடிப்பது போல் நடிக்க மாட்டேன்: தீபிகா படுகோனே

    By Siva
    |

    படத்தில் தம் அடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று இந்தி நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.

    கிழக்கே போகும் ரயிலில் கூட புகை இல்லாமல் இருக்கலாம், ஆனால் வாயில் புகை இல்லாதவர்களைப் பார்ப்பது ரொம்ப ரொம்ப கஷ்டமாகி விட்ட காலம் இது. அப்படி ஒரு 'அடிக்ட் லைபை' வாழ்ந்து வருகிறார்கள் பலரும்.

    அதிலும், திரைப்படங்களில் 'புகைப்பட'க் காட்சிகள் எக்கச்சக்கம். நடிகர், நடிகைகள் தம் அடிக்கும் காட்சிகள் அதிகரித்து வருகின்றன. அத்தைகைய காட்சிகளுக்கு நடிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருவது ஒருபக்கம் இருந்தாலும், பாத்திரத்திற்கு அது ''அவசியம்ணே'' என்று கூறி காட்சிகளை வைக்கத் தவறுவதில்லை நம்மவர்கள்.

    இப்போது நடிகைகளும் கூட 'குப் குப் கூட்ஸில்' ஏறி பயணம் செய்ய ஆரம்பித்து விட்டனர். ஆனால் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே அதிலிருந்து சற்றே வித்தியாசப்படுகிறார். இவர் தற்போது தம் மாரோ தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு பாடல் காட்சியில் புகை பிடிப்பது போன்று நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியதற்கு முடியாது என்று ஒரேயடியாக மறுத்துவிட்டாராம்.

    இது குறித்து தீபிகா கூறியதாவது,

    புகை பிடிப்பது போல் நடிக்க விருப்பம் இல்லை. அது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றார்.

    தீபிகாவை புகை பிடிப்பது போல் நடிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டதற்கு அவர் மறுத்துவிட்டார் என்றார் இயக்குனர் ரோகன் சிப்பி.

    ஆனால், கார்த்திக் காலிங் கார்த்திக் படத்தில் இதே தீபிகா தான் சும்மா நினைத்த போதெல்லாம் புகையாக ஊதித் தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருவேளை அவருக்குப் பிடிக்காத பிராண்டைக் கொடுத்து பிடிக்கச் சொல்லியிருப்பார்களோ...!!!

    English summary
    Dimple beauty Deepika Padukone has refused to act in scenes that want her to smoke. She has told that I don't like to act in smoking scenes, that's why i refused to act in one such scene in Dum maro dum.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X