ஆண்கள் என்றால் பயம்-ஸ்னிக்தா

By Staff

 Snightha Akolk
ஸ்னிக்தாவுக்கு ஆண்கள் மற்றும் பல்லிகள் என்றால் அலர்ஜியாம். அதேபோல பத்திரிக்கையாளர்களைக் கண்டாலும் பயமாம்.

தெனாலி படத்தில் கமல்ஹாசனின் பயப் பட்டியலைப் போல ஸ்னிக்தாவிடம் நிறைய பயங்கள் அடங்கிய பட்டியல் உள்ளது.

புனேவில் பிறந்த ஸ்னிக்தா அகோல்கர், நம்ம ஊருக்கு வந்தது லேட்தான். ஆனால் இந்தியா முழுவதும் இவரை லட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே இந்தி டிவிகளில் பார்த்து ரசித்துள்ளனர் - டிவி சீரியல்கள் மூலம்.

ஏகப்பட்ட மராத்தி, இந்தி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவரைத்தான் மிஷ்கின் கூட்டி வந்து அஞ்சாதே படத்தில் கத்தாழைக் கண்ணாலே பாட்டுக்கு ஆட வைத்து தென்னகத்திலும் பிரபலமாக்கி விட்டார்.

ஸ்னிக்தாவுக்கு காதல் என்றால் பிடிக்காதாம். அது ஒரு நோய் போல என்கிறார். பருப்பு சாதம் என்றால் ரொம்பப் பிடிக்குமாம். அதற்காக உயிரை விடுவேன் என்கிறார்.

தனியாக இருந்தால் கூடவே ஏகப்பட்ட பொம்மைகள் இருக்குமாம். பொம்மைகள்தான் எனது உற்ற தோழர்கள் என்கிறார்.

அப்புறம், ஆண்களைப் பார்த்தால் பயமாம், பல்லிகளைப் பார்த்தால் ரொம்பப் பயமாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் பத்திரிக்கையாளர்களைப் பார்த்தால் காத தூரம் ஓடி விடுவாராம்.

இப்போது நந்தலாலா, ராஜாதிராஜா என இரு படங்களில் நடித்துள்ள ஸ்னிக்தா, புதுப் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறாராம். ஆனாலும் இது வரை வந்தபாடில்லையாம். இதனால் சற்று விசனத்தில் இருக்கிறார் ஸ்னிக்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X