இதெல்லாம் ஒரு அசிங்கமா?-கரீனா

குர்பான் படத்தில் முதுகு முழுக்க தெரியும்படி போஸ் கொடுத்திருக்கிறார் கரீனா. டாப்லெஸ் காட்சியாக இது இருக்குமோ என்ற பேச்சு எழுந்துள்ளது. ஆனால் இது டாப்லெஸ் இல்லை மாறாக பேக்லெஸ் என்கிறார் கரீனா. அதாவது முதுகை மட்டும்தான் எக்ஸ்போஸ் செய்திருக்கிறாராம்.
இதை ஏன் அசிங்கம் என்று வர்ணிக்கிறார்கள் என்றும் லேசான கோபமும் காட்டுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது படத்தின் முக்கிய காட்சியாக வருகிறது. வேண்டும் என்றே இந்தக் காட்சியை படத்தில் திணிக்கவில்லை. எனது முதுகை மட்டும் வெளிப்படுத்தி இதில் நடித்துள்ளேன். படத்தின் கதையை இந்த ஒரு காட்சியே விளக்கி விடும்.
இந்தப் படத்தில் காதல், வன்முறை, அன்பு என அனைத்துமே நிரம்பியிருக்கிறது. அதை ஒரே ஒரு ஸ்டில் மூலம் காட்ட வேண்டும் என தயாரிப்பாளர் கரண் ஜோஹரும், இயக்குநர் ரென்சில் டிசில்வாவும் விரும்பினர். அதன் விளைவே இந்த காட்சி.
இந்தக் காட்சியில் அசிங்கமோ, ஆபாசமோ, அறுவறுப்போ நிச்சயம் இருக்காது. எனவே இதை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார் கரீனா.


Click it and Unblock the Notifications











