'நயன்தாரா'...என் தனிப்பட்ட விஷயம்-பிரபுதேவா

பிரபு தேவா - நயன்தாராவுக்கு இடையே காதல், இருவரும் ரகசியமாகக் கல்யாணம் செய்து கொண்டு, தனி பங்களாவில் குடித்தனம் நடத்துகிறார்கள் என்றெல்லாம் சில மாதங்களாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்த விவகாரத்தை பிரபுதேவா மனைவி ரம்லத் மீடியாவில் பெரும் விவகாரமாக்கினார். பிரபு தேவாவை அபகரித்துக் கொள்ளத் திட்டம் போடும் நயன்தாராவை உதைப்பேன் என்ற அளவுக்கு பேட்டிகள் கொடுத்து, அவர்களின் குடும்ப சண்டையை அம்பலமாக்கினார்.
இத்தனை நடந்தாலும், நயன்தாரா - பிரபு தேவா இருவரின் சந்திப்புகளும் தொடர்கின்றனவாம். சமீபத்தில் சென்னையில் நடந்த சினிமா தொழிலாளர்கள் விழாவுக்கு நயன்தாரா வந்த போது நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அப்போது பிரபுதேவா தனது குழந்தையை அழைத்து போய் நயன்தாராவை பார்த்தாராம்.
பிறகு குழந்தையை அழைத்துக் கொண்டு நயன்தாரா ஷாப்பிங் போனதாக தகவல் வெளியானது. இந்த விஷயங்கள் பிரபுதேவா மனைவி ரம்லத்துக்கு தெரிய ஆவேசமான அவர் இன்னொரு சண்டைக்குத் தயாரானார்.
ஆனால் இந்த முறை மீடியா பெரிதாக அதைக் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் முதல்முறையாக பிரபு தேவா இந்தப் பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "எனக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடக்கவில்லை. நயன்தாரா கையில் எனது பெயரை பச்சை குத்தி இருப்பது உண்மையா என்று என்னிடம் கேட்கிறார்கள். இந்த கேள்விக்கான பதில் ஒரு குழந்தைக்குக்ி கூடத் தெரியும்.
நானும் நயன்தாராவும் சந்தித்துக் கொள்ளவோ, பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்கவோ பயப்படவில்லை. நாங்கள் வெளியில் போவதெல்லாம் தனிப்பட்ட விஷயங்கள்..." என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











