ட்விட்டரில் என் பெயரில் மோசடி...அசின் புகார்!

இவரே் பெயரைப் பயன்படுத்தி யாரோ ட்விட்டரில் 'மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கப் போவதாக' ஒரு 'கெட்ட' செய்தியை எழுதிவிட்டார்களாம்.
கஷ்டப்பட்டு பாலிவுட் போனவரை, மீண்டும் கோலிவுட்டுக்கு இழுத்தால் சும்மா இருப்பாரா...
"நான் தமிழ்ப் படங்களில் இப்போதைக்கு நடிக்கும் ஐடியாவிலேயே இல்லை. ஆனால் யாரோ தேவையில்லாமல் என் பெயரைப் பயன்படுத்தி நான் எழுதியதைப் போல கதைவிட்டிருக்கிறார்கள்.என் பெயரில் ஒரு போலி முகவரியை உருவாக்கியிருக்கிறார்கள்.
இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன். விரைவில் போலீஸ் கமிஷனரை சந்திக்கவிருக்கிறேன்", என்றார்.
மும்பையிலா... சென்னையிலான்னு சொல்லவே இல்லையே!
Comments


Click it and Unblock the Notifications