சல்மான் கல்யாணத்தைப் பார்க்க ஆசை: ஆமிர் கான்
மும்பை: தனது நண்பரும், பிரபல பாலிவுட் நடிகருமான சல்மான் கானின் திருமணத்தைப் பார்க்க ஆவலாக இருப்பதாக சூப்பர்ஸ்டார் ஆமிர் கான் தெரிவித்துள்ளார்.
ஆமிர் கான் தனது 46வது பிறந்தநாளை பாலி ஹில்ஸ் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது தனது நண்பரான சல்மான் கான் குறித்து உணர்ச்சிகரமாக பேசினார் ஆமிர்.
சல்மான் கானின் கல்யாணத்தைக் காண ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆமிர் கூறுகையில்,
நான் சல்மானின் திருமணத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் மட்டுமல்ல அனைவரும் அவரது திருமணத்திற்காக காத்திருக்கின்றனர். அவர் திருமணம் செய்து கொள்ளும் நாள் எங்களுக்கெல்லாம் ஒரு ஷ்பெஷல் நாள் ஆகும்.
நான் எப்பொழுது சல்மானிடம் திருமணப் பேச்சு எடுத்தாலும் உடனே சிரிப்பார் அவ்வளவு தான். அழகான பெண்கள் அவரை எப்பொழுதும் சுற்றி வருகின்றனர். அதனால் அவருக்கு நிறைய சாய்ஸ் உள்ளது என்றார்.
கடந்த 1994-ம் ஆண்டு வெளிவந்த அந்தாஸ் அப்னா அப்னா என்ற காமெடிப் படத்தில் ஆமிரும், சல்மானும் ஒன்றாக நடித்திருந்தனர். மீண்டும் ஒன்று சேர்ந்து நடிக்கவும் ஆவலாக உள்ளனர்.
அன்மைக் காலமாக இரண்டு கான்களும் நண்பர்களாகிவிட்டனர். சல்மான் பீப்ளி லைவைப் பாராட்ட, ஆமிர் தபாங் படத்தை புகழ என்று ஒரே புகழ்ச்சி மழையாக இருக்கிறது.
கல்யாணம் எப்போ என்னறு சீக்கிரம் சொல்லுவாரா, சல்லு?


Click it and Unblock the Notifications











