'கதை நல்லாயிருந்தா படுக்கையறைக் காட்சிக்கும் ஓகேதான்!'

By Staff

Anuya
சென்னை: கதை நன்றாக இருந்தால், அந்தக் கதைக்கு அவசியமென்றால் படுக்கையறைக் காட்சி, முத்தக் காட்சி மற்றும் நீச்சல் காட்சி எதற்கும் தடையில்லை 'சிவா மனசுல சக்தி' அனுயா.

இப்போது அவர் நடித்து வெளிவந்துள்ள மதுரை சம்பவம் படத்தில் படு சூடான படுக்கைக் காட்சியில் நடித்துள்ளார் அனுயா.

இரண்டாவது படத்திலேயே மிகப் பெரிய முன்னேற்றமாக உள்ளதே! என எல்லோரும் மூக்கில் விரல் வைக்க, இப்போது அடுத்த அஸ்திரத்தை வீசியுள்ளார் அம்மணி.

"முதல் படமான 'சிவா மனசுல சக்தி'யில் குடும்பப் பாங்கினியாக நடித்தேன். அடுத்த படம் 'மதுரை சம்பவ'த்தில் கிளாமராக நடித்தது பற்றி கேட்காத ஆளே இல்லை. அந்தளவு ரீச் ஆகிவிட்டது அந்தக் காட்சி. ஒரு சிலர் அதை விமர்சிக்கிறார்கள்.

உண்மையில் அது கதைக்கு மிக அவசியமாக இருந்தது. திணிக்கப்பட்ட காட்சியில்லை.

இப்படத்துக்கு பின் சில பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதைகள் பிடிக்கவில்லை... நானும் நடிக்கவுல்லை. என்னைப் பொறுத்தவரை, நல்ல கதை அமைந்து, அதில் படுக்கையறை அல்லது முத்தக் காட்சிகளும் தேவையாக இருந்தால் தாராளமாக நடிப்பேன். திரையுலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது இன்றைக்கு. கட்டுப் பெட்டித்தனம் இங்கு தேவையில்லை..", என்கிறார் அனுயா.

இதைவிட ஓப்பனா சான்ஸ் கேட்க முடியாது...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X