மீராவின் சொத்து வேண்டாம்; காதல் போதும்-ராஜேஷ்

நடிகை மீரா ஜாஸ்மினும் மாண்டலின் ராஜேஷும் காதலித்து வருகின்றனர். இருவரும் தனி வீட்டில் வசிப்பதாகவும், விரைவில் பகிரங்கமாகத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந் நிலையில் ராஜேஷுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் மீராவின் சொத்துகளை அபகரிக்கவே இந்தக் காதல் நாடகத்தை நடத்துவதாகவும் மீராவின் உறவினர்கள் சிலர் புகார் தெரிவித்து அது செய்தியாகவும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரை வாங்கினார் மீரா. இந்தக் காரை தனது பெயரில்தான் பதிவு செய்ய வேண்டும் என ராஜேஷ் வற்புறுத்தியதாகவும், இப்போது மீராவின் விருப்பத்துக்கு மாறாக அதை அவரே பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மீராவின் நகைகளையும் ராஜேஷ் வாங்கி தனது வீட்டில் வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது போன்ற செய்திகள் பரவி வருவதால் மீரா ஜாஸ்மின் ராஜேஷ் மீது மிகவும் வருத்தத்தில் இருப்பதாகவும், இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் இன்று பரபரப்பாக செய்தி வெளியாகியுள்ளது.
இப் புகார்கள் குறித்து ராஜேஷ் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:
எனக்கும் மீராவுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவது உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை. என்னை பற்றி வரும் தகவல்கள் வதந்திகள்தான்.
எனக்கு மீரா தவிர வேறெந்த பெண்ணுடனும் தொடர்பு இல்லை. யார் சொத்தையும் அபகரிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்குப் போதிய சொத்து உள்ளது.
மீராவின் சொத்து எனக்கு வேண்டாம். அவரது காதல்தான் எனக்குப் பெரிது.
பொறாமைகாரர்கள் தேவையில்லாத கட்டுக் கதைகளை பரப்பி வருகின்றனர். கலை உலகில் இப்படி வதந்திகள் வருவது சகஜம்தான். அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்.
எங்கள் திருமணம் இந்த வதந்திகளின் வாயை அடைக்கும், என்று கூறியுள்ளார் ராஜேஷ்.


Click it and Unblock the Notifications











