ஜாக்சன் அஞ்சலி நிகழ்ச்சி-ஸ்ருதி கமல் பங்கேற்கவில்லை

பாப் உலகின் முடி சூடா மன்னன் மைக்கேல் ஜாக்சனுக்கு சென்னையில் இசையாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ருதி கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்பார்கள் எனக் கூறப்பட்டது.
ஆனால் இதில் தான் பங்கேற்கவில்லை என்றும், இதுதொடர்பான செய்திகள் தவறு என்றும் ஸ்ருதி விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தந்தையுடன் இணைந்து நான், மைக்கேல் ஜாக்சன் அஞ்சலி நிகழ்ச்சியில் பாடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இசையமைப்பாளர் பிரவீன் மணி என்னை அணுகினார். ஆனால் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாக இதில் பங்கேற்க இயலாது என்று நான் கூறி விட்டேன் என்று விளக்கியுள்ளார் ஸ்ருதி.
Comments
அஞ்சலி இசை சினிமா பாப் மைக்கேல் ஜாக்சன் ஸ்ருதி கமல்ஹாசன் cinema michael jackson music pop shruthi kamalhassan tribute


Click it and Unblock the Notifications