ஹாலிவுட் நடிகருடன் காதலா?-ஷ்ரியா

By Staff

Shreya with Jesse Metcalfe
ஹாலிவுட் நடிகருடன் காதல் என்று என்னைப் பற்றி வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் ஷ்ரேயா.

கடந்த வாரம் தனது பிறந்த நாளை எளிமையாக பெற்றோர், நண்பர்களுடன் கொண்டாடினார் ஷ்ரியா.

வழக்கமாக தன் பிறந்த தினத்தை தடபுடலாகக் கொண்டாடுவாராம். ஏன் இந்த முறை அடக்கி வாசித்தார்?, அவரே இப்படிக் கூறுகிறார்:

போன வியாழக்கிழமை என் பிறந்த நாள். பிறந்த நாளுக்கு பெரிய பார்ட்டி எதையும் வைக்கவில்லை. அம்மா, அப்பா, மற்றும் சில தோழிகளுடன் ஹோட்டலுக்கு டின்னருக்கு சென்றேன்.

ஆனால் போன வருடன் என் பிறந்த நாள் ரொம்ப விசேஷமாக இருந்த்து. காரணம் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நான் நடித்து வெளியான சிவாஜி இந்தியா முழுவதும் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. அதற்குப் பிறகு நான் நடித்த எந்த தமிழ், இந்தி படங்களும் சரியாக ஓடவில்லை. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... சிவாஜி போன்ற படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.

அடுத்த ஆண்டில் சுசிகணேசன் இயக்கத்தில் விக்ரமுடன் நடிக்கும் 'கந்தசாமி' உட்பட எனது பல படங்கள் திரைக்கு வருகின்றன. அந்த படங்களின் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

என்னுடைய முதல் ஆங்கிலப் படமான தி அதர் சைட் ஆஃப் தி லைன் ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டேன். இதில் நடித்தபோது இப்பட நாயகன் ஜெஸ்ஸி மெட்கெல்புடன் எனக்கு காதல் என்றெல்லாம் இணைத்துப் பேசினார்கள். அதில் உண்மையில்லை. ஜெஸ்ஸிக்கு ஏற்கெனவே ஒரு காதலி உள்ளார்.... என்றார் ஸ்ரேயா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X