பாலச்சந்தர் கூறியதால் இயக்குநர் ஆனேன்! - ஜெயசித்ரா

By Chakra

பாலச்சந்தர் கூறியதால், என் மகனை வைத்து நானே படம் இயக்க ஆரம்பித்தேன் என்றார் நடிகை ஜெயசித்ரா.

நடிகை ஜெயசித்ரா தன் மகன் அம்ரேஷ் கணேஷை வாத்து, 'நானே என்னுள் இல்லை' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படம் குறித்து ஜெயசித்ரா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "என் மகன் அம்ரேஷ் கணேசை முதலில் நடிக்க வைக்கும் எண்ணம் இல்லை. அவன் இசைத் துறையில் கவனம் செலுத்தி வந்தான். 'சிவரஞ்சனி' என்ற தொடரில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தான். அதைப் பார்த்ததும் அவனை நடிகர் ஆக்கலாம் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது. ஆனால், அவனை வைத்து நான் இயக்குவேன் என்று எதிர்பார்க்கவில்லை.

அம்ரேஷ் நடிக்கும் படத்தை டைரக்டு செய்யும்படி முதலில் பி.வாசுவை அணுகினேன். அவர் வேறு பட வேலைகளில் மும்முரமாக இருந்ததால் பண்ண முடியவில்லை. அவரையடுத்து, கே.எஸ்.ரவிகுமாரை அணுகினேன். அவர், ஒரு பெரிய பட்ஜெட் சொன்னார். அதனால், கே.பாலசந்தரை சந்தித்து நிலைமையை எடுத்து சொன்னேன்.

அவர்தான், 'எதற்கு யோசி்க்கிறாய்... நீயே டைரக்டு செய்துவிடு' என்று கூறினார். அதன்பிறகுதான் நான் இயக்குநர் ஆனேன்,'' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X