மறுமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை- காவ்யா மாதவன்

மலையாளத் திரையுலகை மிகவும் வியப்படைய வைத்த விஷயம் முன்னணியில் இருந்து வந்த நிலையில் காவ்யா மாதவன் திடீரென திருமணம் செய்து கொண்டு போனது.
ஆனால் அதே திரையுலகம் ஒட்டுமொத்தமாக அதிர்ந்து போனது - காவ்யா கல்யாணமான சில மாதங்களிலேயே விவாகரத்து கோரி கணவர் மீது வழக்குத் தொடர்ந்தபோது.
தற்போது சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் காவ்யா மாதவன். அதேசமயம், அவருக்கு மறுமணத்திற்கான ஏற்பாடுகள் நடப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.
ஆனால் காவ்யா இதை மறுத்துள்ளார். மறுபடியும் கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடர்ந்து நடிப்பில்தான் கவனம் செலுத்தப் போகிறேன் என்கிறார் காவ்யா.
இருப்பினும் அவருக்கு மீண்டும் ஒரு திருமணத்தை நடத்தி வைக்க அவரது பெற்றோர் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. விவாகரத்து வழக்கு முடிந்தவுடன் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











