'மங்காத்தா' நீத்து சந்திரா!

அஜீத் நடிக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படம் மங்காத்தா. இது அஜீத்துக்கு 50வது படமாகும். முதலில் இதை கெளதம் மேனன்தான் இயக்குவதாக இருந்தது. படத்திற்கும் துப்பறியும் ஆனந்த் என்று பெயரிட்டிருந்தனர்.
ஆனால் அஜீத்துடன் ஒத்துப் போகாததால், கெளதம் நீக்கப்பட்டார். படத்தின் பெயரையும் மாற்றி விட்டனர். இப்போது மங்காத்தா என்ற பெயரில் இயக்கவிருப்பவர் வெங்கட் பிரபு. அவரது ட்ரூப் அப்படியே இப்படத்திலும் பணியாற்றுகிறது. யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைக்கிறார்.
படத்தின் நாயகியாக முதலில் ஒருவரை கெளதம் மேனன் புக் செய்து வைத்திருந்தார். ஆனால் கெளதமே படத்தை விட்டு நீக்கப்பட்டதால் அனுஷ்கா நடிப்பார் என கூறப்பட்டது. தற்போது அவரை நீக்கி விட்டு நீத்து சந்திரவை போட்டுள்ளனர்.
மாதவன் நடித்த யாவரும் நலம் மூலம் தமிழுக்கு வந்த இந்திக்கார நடிகை நீத்து. இவர் நான் கடவுள் படத்திலேயே நடித்திருக்க வேண்டியவர். அப்போது வாய்ப்பு நழுவிப் போனதால் யாவரும் நலம் மூலம் வந்தார். பின்னர் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்தார்.இப்போது அஜீத்துடன் இணைந்துள்ளார்.
அனுஷ்கா ரொம்ப உசரமானவர் என்பதால், அஜீத்துக்கு ஜோடியாக அவரைப் போட்டால் சரியாக இருக்காது என்று கருதியே அவரை மாற்றி விட்டதாக தெரிகிறது. சிங்கம் படத்தில் நாயகன் சூர்யாவை விட நாயகி அனுஷ்காதான் பல ஷாட்களில் படு உயரமாக தெரிவார்.
இந்த நிலையில் அஜீத்துடன் இணைவது குறித்து நீத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
வெங்கட் பிரபு அலுவலகத்தில் இருந்து ஒரு மாதத்துக்கு முன் என் மானேஜரிடம் பேசினர். அஜித் ஜோடியாக என்னை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக கூறினர். நான் ரொம்ப மகிழ்ச்சியானேன்.
உடனடியாக வெங்கட் பிரபுவை தொடர்பு கொண்டேன். அவர் மங்காத்தா படத்தில் என்னை நாயகியாக்கி இருப்பது பற்றி சொன்னார்.
வெங்கட் பிரபு இயக்கும் ஸ்டைல் பற்றி நான் கேள்விப் பட்டுள்ளேன். அவர் டைரக்ட் செய்த எல்லா படங்களுமே சிறப்பாக பேசப்பட்டது. தமிழ் திரையுலகில் அவர் திறமையான படைப்பாளி. அவர் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு எந்த நடிகையாவது மறுப்பாரா?
அஜீத்துக்கு தென்னிந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பது எனக்கு தெரியும். எங்கள் ஜோடி கச்சிதமாக இருக்கும் என நம்புகிறேன்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவும் மங்காத்தாவில் நடிப்பதாக அறிந்தேன். நாகார்ஜுனாவுடன் நடிக்க இதுவரை வாய்ப்பு கிட்டவில்லை. தற்போது இருவருடனும் இணைந்து நடிப்பது சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது என்று பயங்கர சந்தோஷமாக பேசினார்.
நல்லது ஆத்தா!


Click it and Unblock the Notifications











