நாக சைதன்யாவுக்கு யோகா மட்டும்தான் கற்றுக் கொடுத்தேன்!- அனுஷ்கா
நாக சைதன்யாவுடன் திருமணம் என்று வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை அனுஷ்கா.
தமிழ் - தெலுங்குப் பட உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவருக்கும் நாகார்ஜூனாவுக்கும் நெருக்கம் என்று முதலில் பரபரப்பைக் கிளப்பின ஆந்திர பத்திரிகைகள்.
பின்னர் சில காலம் கழித்து அனுஷ்காவுக்கும் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவுக்கும் காதல் என்று கூறிவந்தனர்.
இந்த வாரம், இருவருக்கும் நிச்சயதார்த்தமே முடிந்துவிட்டதாகவும், இதனை நாகார்ஜூனாவும் அவர் மனைவி அமலாவும் நடத்தி வைத்ததாகவும் தெரிவித்தனர்.
செய்தி வெளியாகி நான்கு தினங்கள் அமைதி காத்த அனுஷ்கா, இப்போது முதல் முறையாக வாய்திறந்துள்ளார்.
அவர் கூறுகையில், "நானும் நாக சைதன்யாவும் காதலிக்கவில்லை. எங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக வந்த செய்தியில் உண்மையுமில்லை. நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நான் நடித்துள்ளேன். அப்போது நாக சைதன்யா அறிமுகம் ஆனார்.
அவருக்கு என்னை விட குறைவான வயது. நான் யோகா டீச்சர் என்பதால் நாக சைதன்யா என்னிடம் வந்து யோகா கற்றுக் கொண்டார். வேறு எந்த தொடர்பும் எங்களுக்குள் இல்லை.
தற்போது படப் பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். வெளி நாட்டில் இருப்பவருடன் எனக்கு எப்படி நிச்சயதார்த்தம் நடக்கும்?, என்றார்.


Click it and Unblock the Notifications











