'ஸ்ரீதேவி இருக்காக.. தபு இருக்காக...'

தென்னகத்திலிருந்து இந்திக்குப் போய் வெற்றிக் கொடி நாட்டிய கனவுக் கன்னிகளான ஸ்ரீதேவி, ஹேமமாலினிக்குப் பிறகு இப்போது அந்த இடத்தை கிட்டத்தட்ட ஆசின் பிடித்து விட்டார் என்ருதான் சொல்ல வேண்டும்.
ஆசினுக்காக அங்குள்ள ஹீரோக்கள் அலை மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் குஷியாக இருக்கும் ஆசின், லோகன்ட்வாலா பகுதியில் உள்ள சொந்த வீட்டில் தங்கி இந்தியில் நிலையான இடத்தை நோக்கி மெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தனது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் குறித்து ரொம்பப் பெருமையாக பேசுகிறார் ஆசின். முன்னாள் கனவுக் கன்னியான ஸ்ரீதேவிதான், ஆசினுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கிறாராம்.
இது குறித்து ஆசின் கூறுகையில், எனக்குப் பக்கத்து வீட்டில்தான் ஸ்ரீதேவி இருக்கிறார். எதில் பிளாட்டில் இருக்கிறார் தபு.
ஸ்ரீதேவியின் பொண்ணு குஷி எனக்கு ரொம்ப பிரண்ட் ஆகி விட்டாள். எப்பப் பார்த்தாலும் ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறாள். என்னுடன் செல்லமாகி விட்டாள்.
தபுவை இன்னும் நான் பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும்போது பார்ப்பேன் என்கிறார் ஆசின்.
சரி பாலிவுட்டில் நிறைய தோழிகள் கிடைத்து விட்டனரா என்று கேட்டால், அப்படியெல்லாம் சொல்ல முடியாது. அதேசமயம், எனக்கு யாரும் எதிரிகளும் இல்லை. சோனம் கபூர் என்னுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இப்போதைக்கு அவர்தான் குளோஸ் பிரண்ட் என்கிறார் ஆசின்.
மற்றவர்கள் எல்லாம் எப்போது ஆசின் மார்க்கெட் குளோஸ் ஆகப் போகிறதோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ, என்னவோ...


Click it and Unblock the Notifications











