'கமல் கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்'

By Staff

Kamal in Unnaipol Oruvan
கமல்ஹாசன் போன்ற தயாரிப்பாளர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். உன்னைப் போல் ஒருவன் இயக்கத்திற்கு எனக்கு 100 சதவீத சுதந்திரத்தைக் கொடுத்தார் கமல் என்று கூறியுள்ளார் பட இயக்குநர் சக்ரி டோலட்டி.

சக்ரி டோலட்டி என்றால் உடனே யாருக்கும் சட்டென நினைவுக்கு வராது. ஆனால் சலங்கை ஒலி படத்தில் கமல்ஹாசனை ஒரு டப்பா கேமராவை வைத்து அங்குமிங்கும் அலைக்கழித்த பப்ளி பையன் என்றால் உடனே ஞாபகத்திற்கு வந்து விடும். அந்த சிறுவன்தான் இன்று கமல்ஹாசனை வைத்து இயக்கி முடித்து ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்.

சலங்கை ஒலி படத்தில் நடித்த பின்னர் மேலும் சில படங்களில் நடித்த சக்ரி பின்னர் 1995ம் ஆண்டு அமெரிக்கா போய் விட்டார். அங்கு திரைப்படக் கல்வியைக் கற்றுக் கொண்டார்.

பாலச்சந்தர், விஸ்வநாத், கே.பாக்யராஜ் போன்ற பிரபல இயக்குநர்களுடன் தொடர்ந்து நல்ல தொடர்பை பராமரித்து வந்தார். இந்த நிலையில் தசாவதாரம் படத்தின்போது கமல்ஹாசனுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் நடந்த படப்பிடிப்புக்கு உதவினார். சில சண்டைக் காட்சிகளை எடுக்கவும் சக்ரி உதவியுள்ளார். இதனால் கவரப்பட்ட கமல்ஹாசன், உன்னைப் போல் ஒருவன் படத்தை இயக்கும் வாய்ப்பை சக்ரியிடம் கொடுத்துள்ளார்.

கமலுடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சுதந்திரமாக இருந்ததாக சந்தோஷத்துடன் கூறும் சக்ரி, பதட்டமே இல்லாமல் பணியாற்றினேன். எனக்கு 100 சதவீத சுதந்திரத்தைக் கொடுத்தார்.

என்னை நிறைய ஊக்கப்படுத்தினார். இதுபோன்ற தயாரிப்பாளர் கிடைக்க ஒரு இயக்குநர் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று பாராட்டுகிறார் சக்ரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X