எல்லாம் விதிப்படிதான் நடக்கும்!-ஸ்ருதி

By Staff

Shruti Haasan
நீச்சல் உடையில் நடிப்பது என் சொந்த விருப்பம். அதை யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார் ஸ்ருதி கமல்ஹாசன்.

கமல் மகள் ஸ்ருதி இப்போது லக் எனும் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே அதிரடியாக நீச்சல் உடையில் நடித்து கவர்ச்சிப் புயலைக் கிளப்பியுள்ளார்.

இதுகுறித்து மீடியாவில் பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இன்று நிருபர்களைச் சந்தித்தார் ஸ்ருதி. அவரிடம் இந்த நீச்சல் உடை தோற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

சினிமா என்பது கவர்ச்சி மீடியம். இங்கே இப்படித்தான் நடிப்பேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. கதைக்கு தேவையானால் நீச்சல் உடையில் நடித்துதான் தீர வேண்டும்.

அப்படித்தான் லக் படத்திலும் நடித்துள்ளேன். அதை விமர்சிப்பது தேவையில்லாதது. சினிமாவில் நடிகைகள் அழகாக இருக்க வேண்டும். அந்த இலக்கணத்துக்குள் என் உடல் அழகு இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

'லக்' படம் ஒரு காமெடி த்ரில்லர். அந்த கதைக்கு நான் நீச்சல் உடையில் நடிப்பது தேவைப்பட்டது. அதனால் நடித்தேன். இதில் தவறேதும் இல்லையே.

என்னைப் பொறுத்தவரை சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம். அது எப்போது எந்த கதாபாத்திரம் மூலம் வரும் என்பதை யாரும் சொல்ல முடியாது. யார் தலையில் எப்படி எழுதி உள்ளதோ அதன்படித்தான் நடக்கும் என்பதை நான் நம்புகிறேன், என்கிறார்.

அப்பா பெரியாரிஸ்ட், மகள் அதற்கு நேரெதிராக விதியை நம்புகிறார்!.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X