தேவிகா பெயரில் அறக்கட்டளை-நடிகை கனகா

By Chakra

Devika with Kanaka
எனது தாய் தேவிகா பெயரில் அறக்கட்டளை தொடங்கி, அவரது விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் செயல்படப் போகிறேன் என்றார் நடிகை கனகா.

திடீர் திருமணம், கணவர் மாயம், தந்தையுடன் பிரச்சினை, ஆவி அமுதாவுடன் மோதல், மான நஷ்ட வழக்கு, கோர்ட், போலீஸ் என்று பரபரப்பைக் கிளப்பி வருகிறார் கனகா.

நேற்று திடீரென்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கனகா. அப்போது அவர் கூறியதாவது:

"எனது தாய் 2002ஆம் ஆண்டு மே மாதம் இறந்தார். அன்றைக்குக் கூட எனது தந்தை தேவதாஸ் வரவில்லை. என்னை பற்றி அவதூறாக பேட்டி தருகிறார். எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றெல்லாம் சொல்கிறார். கஷ்டப்பட்டுதான் அம்மா என்னை வளர்த்தார். அவர் இறப்பதற்கு முன் சொத்துக்களை எனக்கு உயில் எழுதி வைத்தார்.

இது தொடர்பாக எழுந்த வழக்கில், சொத்துகள் எனக்குத்தான் சேரும் என்று தீர்ப்பு வந்துவிட்டது. இன்னும் கூட என் தந்தை என்னை பற்றியும், மறைந்த எனது அம்மா பற்றியும் தவறாக பேட்டி தருகிறார். எனது தாய் எழுதிய உயில் வழியாக வரும் சொத்து வருமானத்தில் 3 சதவீதம் ஏழை குழந்தைகள் படிப்புக்கு செலவிடுவேன். விலங்குகள் நலனுக்காகவும் இதை பயன்படுத்துவேன்.

விரைவில் எனது அம்மா தேவிகா பெயரில் அறக்கட்டனை தொடங்க உள்ளேன். அதன் மூலம் அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றுவேன். நான் இறந்த பிறகு எனது உடல் உறுப்புகளையும் தானம் செய்ய முடிவு செய்துள்ளேன்," என்று கூறினார்.

கனகாவின் திருமணம், காணாமல் போன கணவர் போன்றவை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X