குழந்தைகளைப் பிரிந்தால்தான் திருமணம்: நயன்தாரா உறுதி

By Shankar

Nayanthara
சென்னை: எங்களுக்குள் சண்டையில்லை, ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்றெல்லாம் நயன்தாரா அறிவித்து வந்தாலும், பிரபு தேவா தனது குழந்தைகளை விட்டுப் பிரிந்தால்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று நடிகர் பிரபுதேவாவுக்கு நயன்தாரா நிபந்தனை விதித்துள்ளார்.

முன்னதாக அடிக்கடி குழந்தைகளைச் சந்திக்க சென்றுவிடுகிறார் என்று கூறி கேரளாவுக்கு தன்னைத் தேடி வந்த பிரபுதேவாவை நயன்தாரா சந்திக்க மறுத்ததாகவும், இதனால் அவரது வீட்டுமுன்பு பல மணி நேரம் நின்றுவிட்டு அவரைச் சந்திக்க முடியாமல் பிரபுதேவா திரும்பிவிட்டதாகவும் செய்தி வெளியானது.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் நயன்தாரா. நாங்கள் சந்தோஷமாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

இதனிடையே இருவரிடையேயும் சமரசம் செய்துவைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் நயன்தாரா தனது நிலையில் பிடிவாதமாக உள்ளாராம்.

முதல் மனைவியுடனும், குழந்தைகளுடனும் உள்ள தொடர்பை முற்றிலும் துண்டித்தால் மட்டுமே திருமணத்துக்கு சம்மதிப்பேன் என்று உறுதியாகக் கூறிவிட்டாராம்.

இதனால் இருவரின் திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் புதிதாக படங்களில் நடிக்கவும் நயன்தாரா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்டமா இரண்டு தமிழ் இயக்குநர்களிடமும் ஒரு தெலுங்குப் படத்துக்காகவும் கதை கேட்க சம்மதித்துள்ளாராம் நயன்தாரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X