twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது மலிவான விளம்பர டெக்னிக்! - நமீதாவின் பளீர் பேட்டி'!

    By Staff
    |

    Namitha
    ''அழகான பொண்ணுதான் படத்தில் நடித்த நமீதா சரியான ஒத்துழைப்பு தராததால் நாங்கள் செலவழித்த பணம் முழுக்க வீணாகிவிட்டது. அவரை நெருங்கவே முடியாததால் நினைத்த கதையைப் படமாக்க முடியவில்லை," என்று அந்தப் படத்தின் இயக்குநர் திரு பேட்டி கொடுத்திருந்தார்.

    ஆனால் இது சுத்தப் பொய் என்றும் மலிவான பப்ளிசிட்டி என்றும் கடுமையாக மறுத்துள்ளார் நமீதா.

    அழகான பொண்ணுதான் சில தினங்களுக்கு முன் வெளியானது. மோசமாக படமாக்கப்பட்டிருப்பதாக பேச்சு பரவியதில், ரசிகர்களால் நிராகரிக்கப்பட்ட படம் இது.

    இந் நிலையில் நிருபர்களிடம் அந்த இயக்குநர் நமீதா மீது பின்வரும் குற்றச்சாட்டுகளை வைத்தார்:

    நமீதா பட வாய்ப்பே இல்லாமல் சும்மா இருந்தபோது இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்தோம், 3 ஆண்டுகளுக்கு முன். பெரும் தொகையை அட்வான்சாகக் கொடுத்தோம். உடனே ஒப்புக் கொண்டார்.

    பூஜை போட்டு 6 மாதங்கள் கழித்து, படப்பிடிப்பை கொடைக்கானலில் தொடங்கினோம். சில நாட்களே நடித்த நமீதா, அப்புறம் படத்தில் நடிக்க மறுத்து, சென்னை திரும்பிவிட்டார்.

    இதுபற்றி நான் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தேன். அவர்கள் நமீதாவை அழைத்து விசாரித்தபோது, 'திருவுக்கு டைரக்டு செய்ய தெரியவில்லை' என்று சொன்னார். படத்தைக் காட்டினேன். உடனே 'திருவை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது' என்று கூறிவிட்டார்.

    படப்பிடிப்பை தொடங்கிய பின், நமீதா ஒத்துழைப்பு கொடுக்கவே இல்லை. என்னை ஒரு இயக்குநராகவே அவர் மதிக்கவில்லை. சிரிக்க சொன்னால் கூட சிரிக்க மாட்டார். அவரிடம், பத்து அடி தூரத்தில் நின்றுதான் பேசவேண்டும். அருகில் நெருங்கவே விடவில்லை.

    உடன் நடித்த பையனை பிடிக்கவில்லை என்றார். ஒருவழியாக சமாதானம் ஆகி நடிக்க ஆரம்பித்தார்.

    இந்தப் படத்துக்காக நமீதாவிடம் மொத்தம் 35 நாட்கள் கால்ஷீட் வாங்கியிருந்தேன். ஆனால், அவர் நடித்தது 25 நாட்கள்தான். அதற்கு மேல் நடிக்க மறுத்து விட்டார். அதனால் நான் நினைத்த கதையை படமாக்க முடியவில்லை.

    அதனாலதான் நினைத்தமாதிரி படம் வரவில்லை" என்றார் திரு.

    இது பப்ளிசிட்டி டெக்னிக்-நமீதா:

    இதுகுறித்து நமீதாவிடம் பேசினோம். அவர் இப்படிச் சொல்கிறார்,

    "உண்மையிலேயே திருவுக்கு படத்தை எடுக்கத் தெரியவில்லை. கிறுக்குத்தனமாக உளறுகிறார். உண்மையிலேயே இந்தப் படத்தை நான் பண்ணமாட்டேன் என்றுதான் சொன்னேன். என்னை வற்புறுத்திதான் நடிக்க வைத்தனர். தயாரிப்பாளர் சங்கம் வேறு கம்பெல் பண்ணார்கள். திருவுக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. அவர் பேசுகிற தமிழ் எனக்குப் புரியவில்லை. உதவிக்கும் யாரையும் அழைத்து வரமாட்டார். இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்.

    இதையெல்லாம் மீறி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்தும் படத்தை குறித்த காலத்தில் முடிக்கவில்லை. மலிவான விளம்பரத்துக்காக இப்போது என் பெயரைக் கெடுக்கிறார்கள். ஆரம்பத்தில் இவர்களுக்கு ரியாக்ட் பண்ணக்கூடாது என்று அமைதி காத்தது தவறாகப் போய்விட்டது. என்பெயரைக் கெடுத்து பப்ளிசிட்டி தேடித்தான் படத்தை ஓட்ட வேண்டும் என்று நினைக்கிறார் அந்த டைரக்டர்...," என்றார் நமீதா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X