நானும் விஜய்யை டைரக்ட் பண்ணப் போறேன்! - சித்திக்

இவர்களுக்கு நடுவில் மலையாள இயக்குநர் சித்திக்கும் முண்டா தட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளார். ஏற்கெனவே விஜய்யை வைத்து ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கியவர்தான் இந்த சித்திக். இவருக்கு விஜய் எந்த நம்பரை ஒதுக்கிறாரென்று (அட... எத்தனையாவது படம்னு சொல்றோம்) இன்னும் உறுதியாகவில்லையாம்.
ஆனாலும் விஜய்யிடம் கதை சொல்லிவிட்டேன், விரைவில் எப்போது படம் துவங்குவதென்று அவர் அறிவிப்பார் என்றும் பழக்கமான பத்திரிகையாளர்கள் சிலரிடம் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.
இவர் ஒன்றும் விஜய்க்காக மெனக்கெட்டு கதையை உருவாக்கவில்லை. தான் ஏற்கெனவே மலையாளத்தில் திலீப்- நயன்தாராவை வைத்து எடுத்து வரும் பாடிகார்ட் படத்தையே பாலிஷ் போட்டு சொன்னாராம். விஜய்க்கு பரம திருப்தியாம்.
இருக்காதா பின்னே... ரீமேக்காச்சே!
Comments


Click it and Unblock the Notifications