இரண்டாவது திருமணம் இப்போது இல்லை! - சோனியா அகர்வால்

By Shankar

இப்போதைக்கு இரண்டாவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ விரும்புகிறேன், என்றார் நடிகை சோனியா அகர்வால்.

இயக்குநர் செல்வராகவனால் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை சோனியா அகர்வால். அறிமுகப்படுத்திய குரு - நடிகை என்ற உறவு பின்னர் காதலன் - காதலியாக மாறி, திருமணத்தில் முடிந்தது.

ஆனால் இந்தத் திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை. இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு அதிகரித்ததால், விவாகரத்துப் பெற்றனர்.

இந்த நிலையில், செல்வராகவனுக்கு இரண்டாவது திருமணம் நடக்க உள்ளது. சமீபத்தில்தான் செல்வராகவன் - கீதாஞ்சலி நிச்சயதார்த்தம் நடந்தது.

அடுத்து சோனியா அகர்வாலும் திருமணம் செய்து கொள்வார் என்று பேச்சு கிளம்பியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இரண்டாவது திருமணம் என்பதையே நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. மேலும் எனக்கு ரொம்ப வயதாகியும் விடவில்லை. எனவே இன்னும் கொஞ்ச நாள் வாழ்க்கையை அனுபிவித்துவிட்டு, திருமணம் குறித்து யோசிக்கப் போகிறேன். இப்போதைக்கு என் நோக்கம், மீண்டும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும். அவ்வளவுதான்‌!," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X