என்னைப் பற்றிய வதந்திகள் குறித்து கவலையே இல்லை - ஆசின்

பாலிவுட்டில் புயலெனப் புகுந்து இப்போது சப்தம் இல்லாமல் ஓரம் கட்டப்பட்டு விட்டார் ஆசின்.
கஜினி அவருக்கு இந்தியில் பெரிய பிரேக் கொடுத்தது. ஆனால் அடுத்து வந்த சல்மான் கான் படம் அவரை கவிழ்த்து விட்டது.
இப்போது படம் இல்லாத நாயகியாகி விட்டார் ஆசின். இதனால் மீண்டும் தமிழ் பக்கம் திரும்பியுள்ளார். விஜய்யுடன் ஜோடி போட்டு நடிக்கப் போகிறார்.
இதற்கு இடையே அவரைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள், சர்ச்சைகள். ஆனாலும் அசராமல் இருக்கிறாராம் ஆசின்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் ஒருபோது்ம் வதந்திகள் குறித்து கவலைப்பட்டதே இல்லை. வதந்திகள் பரவும் அளவுக்கு நான் நடந்து கொள்ள மாட்டேன். ஆனால் அதையும் மீறி வதந்திதகள் வரும்போது நான் ஒன்றும் செய்ய முடியாது.
வதந்திகளை சமாளிக்க ஒரே வழி அவற்றைக் கண்டும் காணாமலும் போய் விடுவதுதான். அதைத்தான் நான் செய்து வருகிறேன்.
என்னுடையது சிறிய குடும்பம். எனது திரைப்படத் தொழில் தொடர்பான அனைத்தையும் எனது தந்தை கவனித்துக் கொள்கிறார். அவர் எப்போதும் என்னுடனேயே இருக்கிறார். என்னைப் பற்றி அவருக்கு நன்றாக தெரியும். இது போதாதா எனக்கு என்கிறார் ஆசின்.
ஆசினுக்கும், அவரது அப்பாவுக்கும் பெரும் சண்டையாகி அவர் தனியாக போய் விட்டார், ஆசின் தனியாக தங்கியிருக்கிறார் என்று கூட செய்திகள் வந்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











