மலையாளமே பெஸ்ட்-பிரியாமணி!

தமிழில் அறிமுகமாகி, தமிழ் மூலம் இப்போது தேசிய அளவிலும் அங்கீகாரம் பெற்றுள்ளார் பிரியா மணி. இடையில் மலையாளத்திலும் நடித்தார் பிரியாமணி. ஆனால் தமிழ்ப் படமான பருத்தி வீரன்தான் அவரது நடிப்புத் திறமையை முழுமையாக வெளிக் கொணர்ந்து, தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.
ஆனால் மலையாளப் படங்கள்தான் எந்த மொழிப் படங்களையும் விட சிறந்தவை, உயர்வானவை என்று 'மணி'யை மாற்றி அடித்துள்ளார் பிரியா.
இதுகுறித்து பிரியா மணி கூறுகையில், நான் தமிழில் சிறந்த நடிகையாக தேர்வு பெற்றாலும் கூட, மலையாளம்தான் தென்னிந்தியாவிலேயே சிறந்த திரையுலகம் என்பது எனது கருத்து.
என்னை தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள். மலையாளத்தில் யாருமே நடிகைகளை இப்படித்தான் நடிக்க வேண்டும் என வற்புறுத்துவதில்லை.
எங்களை சுதந்திரமாக நடிக்க அனுமதிக்கிறார்கள். ஆனால் பிற மொழிகளிலோ, இப்படி நடிக்க வேண்டும், அப்படி நடிக்க வேண்டும் என கலைஞர்களை இயக்குநர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள், பாடம் நடத்துகிறார்கள்.
அதனால்தான் தமிழிலும், தெலுங்கிலும் நல்ல,திறமையான கலைஞர்கள் அரிதாக இருக்கிறார்ள். பருத்தி வீரனில், நான் சுதந்திரமாக நடிக்கவில்லை. இயக்குநர் அமீர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே பிரதிபலித்தேன் என்கிறார் பிரியா மணி.
ஆத்தாடி, ஒரு விருதுக்கே இம்புட்டுப் பேச்சா?


Click it and Unblock the Notifications











