மர்மயோகியில் ரஹ்மானின் புதிய இசை

இந்தப் படத்துக்காக, இதுவரை தமிழ் திரையில் ஒலித்திராத லத்தீன் அமெரிக்க பாணி இசைக் கருவிகளை மர்மயோகிக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார் ரஹ்மான்.
சமீபத்தில் ஒரு இசைவிழாவுக்கு வந்திருந்த ரஹ்மானிடம் இதுபற்றிக் கேட்டபோது, நான் எல்லா படங்களுக்குமே பெஸ்ட் இசையைத் தரவே முயற்சிக்கிறேன். முயற்சிதான் என்னுடையது. மற்றபடி பாடல்களின் தலைவிதி ரசிகர்களின் மன நிலையைப் பொறுத்தே அமைகிறது. சில நேரங்களில் அதிகபட்ச விளம்பரங்கள் கூட ஒரு இசையை திரும்பத் திரும்ப கேட்க வைத்து விடும்.
ஆனால் உண்மையான இசை எப்போதும் நிலைத்திருக்கும். மர்மயோகி ஒன்லைன் மட்டும்தான் எனக்குத் தெரியும். வித்தியாசமான ஒரு முயற்சி. அதற்கு வித்தியாசமான இசையைத் தரவே முயற்சிக்கிறேன்.
இதில் சில புதிய ஒலிகளை அறிமுகப்படுத்த லத்தீன் அமெரிக்க இசைக் கருவிகளை உபயோகிக்கும் திட்டம் உள்ளது. இசைக்கு நல்ல ஸ்கோப் உள்ள கதை என்பதால் உங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்காத அளவுக்கு பாடல்கள் இருக்கும் என்றார் அடக்கமாக.
சமீபத்தில் உங்களை நடிக்க வைக்கும் திட்டத்தில் இருப்பதாக பாரதிராஜா கூறினாரா... அப்படி ஏதாவது எண்ணமிருக்கிறதா?
(சிரிக்கிறார்) அவர் என்மீதுள்ள அன்பில் அப்படிச் சொல்லியிருப்பார். இசைக்கே நேரம் ஒதுக்க முடியவில்லை என்றார்.
சமீபத்தில் வெளியான இசை ஆல்பங்களில் குசேலனுக்கு அடுத்து அதிக சிடிக்கள் விற்று சாதனை படைத்துள்ளது ரஹ்மானின் சக்கரகட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் அவர் இசையைத்து வெளிவந்துள்ள ஜானே து ய ஜானே நா பெரும் சாதனை புரிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











