காதலில் விழுந்தேன்... ஆனா கல்யாணம் முடிவாகல! - ரீமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரீமா சென். அப்போதை இவருக்கும் ஒரு தொழிலதிபருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல அப்போது மறுப்புத் தெரிவித்துவிட்டார் ரீமா.
இப்போது கைவசம் படங்கள் ஏதும் இல்லாத நிலையில், தனக்கும் தொழிலதிபர் ஷிவ் கரண் சிங் என்பவருக்கும் காதல் இருப்பது உண்மைதான் என்றும், ஆனால் திருமணம் இன்னும் முடிவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ரீமே மேலும் கூறுகையில், "நேற்று இரவு மும்பையில் நடந்த நள்ளிரவு விருந்தில், என்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்டார் ஷிவ் கரண் சிங். உடனே ஒப்புக் கொண்டேன். அடுத்த நிமிடமே தயாராக வைத்திருந்த வைர மோதிரத்தைப் பரிசளித்தார் ஷிவ்..." என்றார்.
ஷிவ் கரண் சிங்குக்கு சொந்தமாக மோகா (சென்னையிலும் கிளை உள்ளது), ஸ்மோக் ஹவுஸ் என பல ஓட்டல்கள் உள்ளன.
Comments


Click it and Unblock the Notifications