காமெடியான சுனேனா!

காதலில் விழுந்தேன் படத்துக்குப் பிறகு மீண்டும் நகுலன் ஜோடியாக மாசிலாமணியில் நடிக்கிறார் சுனேனா.
இந்தப் படத்தில் அவர் நகைச்சுவையும் துடுக்குத்தனமும் நிறைந்த வேடமாம் அவருக்கு.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
காதலில் விழுந்தேன் படத்தில் எங்கள் ஆன்ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க்அவுட் ஆனது. அதன்பிறகு எங்கள் ஜோடிக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதனால் இப்படம் எனக்கு மிகவும் விசேஷமாக இருக்கும். மேலும் காமெடி தூக்கலாக உள்ள வேடத்தில் நடிக்கிறேன். கவச்சியை விட காமெடிதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
இதில் பரத நாட்டியத்தில் கைதேர்ந்தவளாக நடித்துள்ளேன். அஜ்மல் ஜோடியாக கதிர் என்ற படத்திலும் நடிக்கிறேன். இது ரொமான்டிக் கதை.
பாலகுமார் இயக்கும் யாதுமாகி படத்தில் நடிக்கிறேன். இதில் புதுமுகம் சச்சினுக்கு ஜோடி. தொடர்ந்து புதுமுக இயக்குனர்களுடனும் புதுமுக ஹீரோக்களுடனும் நடிப்பது பற்றி கேட்கிறார்கள்.
நானே புதுமுகம்தான். காதலில் விழுந்தேன் படம் முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டுதான் தயாரானது. அது சூப்பர் ஹிட்டானது. அதனால் புதுமுகம் என யாரையும் பார்ப்பதில்லை. ஒரு முழு காமெடி படத்தில் நடிக்க விரும்புகிறேன். தமிழில் கவனம் செலுத்துவதால் தெலுங்கில் புதுப் படங்கள் எதுவும் ஏற்கவில்லை என்றார் சுனேனா.


Click it and Unblock the Notifications











