இது வீண் பழி! -அசின்

தனது ஆண் உதவியாளர் நல்லமுத்துக்குமார் திடீரென்று மாயமானதால் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் நடிகை அசின். நல்ல முத்துக்குமாரின் தாயார் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில், நடிகை அசின் மற்றும் அவருடைய தந்தையிடம் விசாரணை நடத்துவதற்காக மும்பைக்கு விரைந்துள்ளனர் சென்னை தனிப்படை போலீசார்.
இந்நிலையில் நடிகை அசின் இன்று அளித்துள்ள பேட்டி:
நல்ல முத்துக்குமார் விவகாரத்தில் எங்கள் பக்கம் எந்தத் தவறும் இல்லை. அவர் வேலையை விட்டு நின்ற உடனே நாங்கள் போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டோம். ஒருவர் வேலை விட்டுப் போன பிறகு, என்ன செய்கிறார் என்று பின் தொடர்ந்து போய் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
சரி... தொடர்ந்து உதவியாளர்கள் விவகாரத்திலேயே மாட்டிக் கொள்கிறீர்களே, என்ன காரணம்?
அதான் எனக்கும் புரியவில்லை. நான் நல்ல மனதுடன் உதவி செய்கிறேன். ஆனால் அதுவே எனக்கு வம்பாக வந்து முடிகிறது. எனது படங்களில் கவனம் செலுத்தவே எனக்கு நேரமில்லை. இதில் வேலைக்காரர்களை மிரட்டுகிறேன் என்று வீண் பழி வேறு, என்றார் அசின்.


Click it and Unblock the Notifications











