ஆண்ட்ரியா பற்றி பேச விரும்பவில்லை! - சோனியா

By Staff

Sonia and Andrea
எங்கள் விவாகரத்துக்கு யார் காரணம் என்பது குறித்தோ, நடிகை ஆண்ட்ரியா பற்றியோ நான் பேசவே விரும்பவில்லை என நடிகை சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்.

உருகி உருகி காதலித்து, திருமணத்துக்கு முன்பே ஒன்றாகக் குடித்தனமும் நடித்தி, பின்னர் பிரமாண்டமாய் திருமணம் செய்து கொண்டு, ஒரே ஆண்டுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு இப்போது விவாகரத்துக்காக கோர்ட் படியில் நிற்கிறார்கள் சோனியாவும் செல்வராகவனும்.

இந்த நிலையில், மனமுடைந்து போன சோனியா அகர்வால் தற்கொலைக்கு முயன்றதாக நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால் சோனியாவோ, தற்கொலைக்கு முயலும் அளவுக்கு நான் கோழையல்ல என்று பேட்டியளித்துள்ளார்.

தனது திருமண உறவு, விவாகரத்து மற்றும் தன் வாழ்க்கையில் குறுக்கே வந்த ஆண்ட்ரியா குறித்து முதல் முறையாக சோனியா அகர்வால் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

"நான் தற்கொலைக்கு முயன்றதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. நான் ஏன் தற்கொலை செய்ய வேண்டும். அது சிலரால் பரப்பப்பட்ட கற்பனையான காமெடி. என்னை பொறுத்தவரை நான் திடமான மனது கொண்டவள். என் வாழ்க்கையில் அதிகமான மன அழுத்தங்கள் ஏற்பட்டபோது கூட நான் எதற்கும் கலங்காமல்தான் இருந்துள்ளேன்.

இப்போது கூட ஜிம்மில் உடற்பயிற்சி செய்து விட்டு படப்பிடிப்புக்குச் செல்ல தயாராகிக் கொண்டுடிருக்கிறேன்.

முன்பைவிட நான் இப்போது அமைதியாகவும், தெளிவாகவும் இருக்கிறேன். என்னை பற்றிய, என் வாழ்க்கையின் தனிப்பட்ட சில விஷயங்களை, என் முடிவுகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை.

எல்லோரது வாழ்க்கையிலும் பிரச்சினைகள் இருக்கத்தானே செய்கின்றன. எல்லோரும் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டா திரிகிறார்கள். நாமாகவேதான் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

செல்வராகனும், நானும் காதலித்தது, திருமணம் செய்து கொண்டதெல்லாம் உங்களுக்குத் தெரியும்.
ஆனால் இப்போது நாங்கள் நல்ல தம்பதிகளாக இல்லை. பிரச்சினைகள் வந்தபோது பேசி உறவை ஒட்டவைக்க முயற்சி செய்தேன். முடியவில்லை. எனவே நண்பர்களாக பிரியலாம் என முடிவு செய்துவிட்டோம்.

இந்தத் திருமணத்தை மிக அவசரப்பட்டு செய்து கொண்டதாக நான் நினைக்கவில்லை. திருமணம் நடந்த போது எனக்கு 24 வயதுதான். திரையுலகில் உச்சகட்ட நட்சத்திரமாக இருந்தேன். அந்த நேரத்தில் நான் சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் குதிப்பேன் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் செய்தேன்.

செல்வராகவன் தாயார்தான் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று என்னைக் கட்டாயப்படுத்தினார். நானும் என் பெற்றோருடன் போராடி திருமணத்துக்கு சம்மதம் பெற்றேன். இல்லாவிட்டால், அப்படியே இருந்திருப்பேன்" என்றார் சோனியா.

ஆண்ட்ரியா காரணமா?..

இந்தத் திருமண முறிவுக்கு ஆண்ட்ரியா காரணமா என்ற கேள்விக்கு, "அதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆண்ட்ரியா பற்றி பேசவே நான் விரும்பவில்லை" என்றார் கோபத்துடன்.

மீண்டும் முழு வீச்சில் நடிக்கப் போவதாகவும், பழைய இடத்தை நிச்சயம் பிடிப்பேன் என்றும் நம்பிக்கையுடன் கூறினார் சோனியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X