ரஜினி - கமலை இயக்குவதே லட்சியம் - முருகதாஸ்

ரஜினிக்கு கதையும் சொன்னார். ஆனால் பின்னர் என்ன நடந்ததோ... அவர் ரஜினி படத்தை இதுவரை இயக்கவே இல்லை. சில மாதங்களுக்கு முன்பு கூட, அடுத்த படத்துக்கு ரஜினியுடன் ஆலோசனை நடத்தினார் முருகதாஸ் என்று கூறப்பட்டது.
ஆனால் இப்போதோ மனிதர், கமல் படத்தை இயக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
இடையில் என்ன நடந்தது..?
"ஒண்ணுமில்லை. ரஜினி சாருக்கு நான் கதை சொன்னது உண்மைதான். அவர் கூப்பிடும்போதுதான் மீண்டும் அது பற்றி கூற முடியும்.
இப்போதைக்கு நான் இந்தியில் ஒரு படம் இயக்குகிறேன். ஷாரூக்கான்தான் ஹீரோ. இது ஒரு காமெடி - ஆக்ஷன் படமாக அமையும். ஷாரூக்கானுக்கு இது இரண்டுமே கைவந்த கலை.
அடுத்து தமிழில் எப்போது படம் செய்வது என்பதை முடிவு செய்யவில்லை. கமல் சார் நடிக்க ஒரு படம் இயக்க வேண்டும் என்பது என் லட்சியம். ரஜினி - கமல் இருவரின் படங்களையுமே இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதைவிட சந்தோஷம் எதுவுமில்லை என்றார் முருகதாஸ்.


Click it and Unblock the Notifications











