புடவைக் கட்டாம ஆண்களைக் காப்பாத்தறேன்! - நமீதா

அதைவிட கொடுமை... அதை கடைசில சொல்றேன்...
பிரஸ்மீட்டில் நமீதா உதிர்த்த முத்துக்கள்...
தமிழ்நாடு பூரா எனக்கு ஏகப்பட்ட 'மச்சான்ஸ்' இருக்காங்க. இவங்க இல்லன்னா நான் இல்ல. அதனால இவங்க கொடுக்கிற அன்புத் தொல்லையை நான் தாங்கிக்கறேன்.
எனக்கு வேற எந்த மொழி சினிமாவையும் விட தமிழ்தான் ரொம்ப பிடிச்சிருக்கு. இங்கே கொடுக்கிற அளவுக்கு மரியாதை, அன்பு வேற எங்கயும் கிடைக்காது. அதனாலதான் பாலிவுட்ல நிறைய ஆஃபர் வந்தாலும் நான் வேண்டாம்னு சொல்லிடறேன்.
எனக்கு புடவையே கட்டத் தெரியாதா என சிலர் கேட்பதாக சொல்கிறார்கள். எனக்கு நல்லா புடைவை கட்டத் தெரியும். அப்படி கட்டினா ரொம்ப ரொம்ப கவர்ச்சியா தெரிவேன். அதைப் பார்த்து 'மச்சான்ஸ்' எல்லாம் கெட்டுப் போயிடுவாங்க. ஆம்பிளைங்க கெட்டுப்போகாம தடுக்கத்தான் நான் புடவை கட்டறதில்லை.
நடிகைகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. அதற்கு காரணம் போட்டி- பொறாமைதான் என்று நயன்தாரா கூறியுள்ளார். அவர் சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான், எல்லா நடிகைகளுடனும் நன்றாக பேசுவேன். யாருடனும் எனக்கு பிரச்சினை வருவது இல்லை.
நான் நடித்த ஜகன்மோகினி படம் 'மச்சான்ஸ்' ஆதரவில் அமோகமாக ஓடுகிறது என்றார்.
வேற ஒண்ணுமில்லை... நமீதாவுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்ள ரசிகர்களை விட ஆர்வமாக வரிசை கட்டி நின்றவர்கள்... பேனா மன்னர்களான நம்ம பிரஸ் ரிப்போர்ட்டர்கள்தான் (சிலர் விதிவிலக்கு)!


Click it and Unblock the Notifications











