மீண்டும் வருவேன்! - சதா

இந்த நிலையில் தெலுங்கு, மலையாளம் என கவனம் செலுத்திக் கொண்டிருந்த அவர், இப்போது இந்தியில் பிஸியாக இருக்கிறாராம்.
இந்தியில் அவர் நடித்து வெளியான லவ் கிச்சடி நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறதாம். மேலும் கல்பலி, க்ளிக் உள்ளிட்ட சில படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளனவாம்.
தமிழில் என்ன ஆச்சு... ஏன் இத்தனை பெரிய இடைவெளி?
"தமிழில் நான் நடித்த படங்கள் எதுவும் தோல்விப் படங்கள் இல்லை. இது ரசிகர்களுக்கே தெரியும். ஆனாலும் வாய்ப்பு பெரிதாக வரவில்லை. என்ன செய்வது..ஒருவேளை ஆர்ட் படங்களில் நடித்திருக்க வேண்டுமோ என்னமோ? அந்த மாதிரி வாய்ப்புகள் ஏதாவது வந்தாலும் என்னை நிரூபிப்பேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், தமிழில் நல்ல கதைகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். மீண்டும் வருவேன்" என்கிறார் சதா.
நான் அவள் அது என்று ஒரு படம். மாதவனும் சதாவும் நடித்திருந்தார்கள். இதோ அதோ என இழுத்துக்கொண்டே போகும் இந்தப் படம் ரிலீசானால் தனக்கு மீண்டும் தமிழ் வாய்ப்புகள் பிரகாசமாக அமையும் என்று நம்புகிறார் சதா.
"ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பல பிரச்னைகள். அதுதான் அந்தப் படத்தின் ரிலீசுக்கு தாமதம் என நினைக்கிறேன். படம் பாதியில் நின்றிருந்தாலும் விட்டு விடலாம். ஆனால், படம் முழுவதும் முடிந்தும் ரிலீசாகவில்லை. அதனால் கொஞ்சம் வருத்தம் இருக்கிறது..." எனும் சதா, திருமணம் பற்றி யோசிப்பது கூட இல்லையாம்.
"என்ன அவசரம்... சில வருடங்கள் போகட்டும் பார்க்கலாம்" என்கிறார்.


Click it and Unblock the Notifications











